
உலகின் புதிய 7 அதிசயங்கள்
உலகின் புதிய 7 அதிசயங்கள் பற்றிய வாக்கெடுப்புப் பணி வரும் ஜுலை திங்கள் 6ஆம் நாளளோடு நிறைவடைய உள்ளது. இது வரை 5 கோடிக்கு மேற்பட்டோர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் படி, சீனாவின் பெருஞ்சுவர், கொலோசியம் எனப்படும் பண்டைய ரோம் நகரின் வட்ட வடிவிலான போட்டி அரங்கம், பெரு நாட்டின் மச்சு பிச்சுவிலுள்ள நகரக் கோட்டை, கிரேக்கத்திலுள்ள ஏதன்ஸ் அகர்போலீஸ் நகரம், மெக்சிகோவின் மயன் கோயில் சிதிலம், பாரிஸிலுள்ள ஏபிள் இரும்புக் கோபுரம், சிலியிலுள்ள ஈஸ்டர் தீவு சிலைகள், பிரேசிலின் கிறிஸ்து சிலை, இந்தியாவின் தாஜ்மஹால், ஜோர்டானின் பேட்ரா நகரம் ஆகியவை, முதல் 10 இடங்களில் உள்ளன என்று இந்த வாக்கெடுப்புக்கான திறனாய்வுக் குழு அறிவித்துள்ளது.
உலகின் 7 புதிய அதிசயங்கள் தொடர்பான வாக்கெடுப்பு நடவடிக்கையை, சுவிட்சர்லாந்தில் பிறந்த கனேடிய நாட்டவர் பெர்நார்ட் வேபர் என்பவர் தொடக்கி வைத்தார். யூனேஸ்கோ அமைப்பின் உலக மரபுச்செல்வ மையம் ஜூன் 6அம் நாள் வெளியிட்ட அறிக்கையில்,"தனக்கும் இவ்வாக்கெடுப்பு நடவடிக்கைக்கும் அதிகாரப்பூர்வ தொடர்பு ஏதும் இல்லை "என்று தெரிவித்துள்ளது.
இவ்வாக்கெடுப்புக்கான முடிவு, வருகின்ற ஜூலை 7ஆம் நாள் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட உள்ளது.
சீனாவிலும் கிளைகளைத் திறக்கத் திட்டமிட்ட
இந்திய ஓட்டல் நிறுவனம்
இந்தியாவின் பல நகரங்களில் சீன உணவு வகைகளைப் பரிமாறும் "மெயின்லாண்ட் சீனா "ஓட்டல் நிறுவனம், சீனாவிலேயே தனது கிளைகளைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது. "மெயின்லாண்ட் சீனா "ஓட்டல் நிறுவனம், இந்தியாவின் 6 நகரங்களில் 31 கிளை விடுதிகளை நடத்தி வருகிறது. இங்கு சீன வகை உணவுகள், சீனாவிலுள்ள சுவையுடன் பரிமாறப்படுகின்றன. இந்த விடுதிகளில் பரிமாறப்படும் உணவுகளுக்கான அனைத்து மூலப்பொருட்களும் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனாவிலுள்ள உணவகங்களைப் போல, அதே சுவையுடன் அதே முறைப்படி பல்வேறு உணவு வகைகள் தயாரித்துப் பரிமாறப்படுகின்றன. சீனாவில் குவாந்துங், பெய்ஜிங், சிச்சுவான், ஹுனான் போன்ற பிரதேசங்களில் பிரபலமாகவுள்ள அனைத்து உணவு வகைகளும் இந்த விடுதிகளில் பரிமாறப்படுகின்றன. "மெயின்லாண்ட் சீனா "ஓட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஞ்சன் சட்டர்ஜி, சீன உணவைச் சீன மக்களுக்குச் சீனாவிலேயே வழங்கத் திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு, பெய்ஜிங் மற்றும் சாங்காய் மாநகரங்களில் ஓட்டல் கிளைகள் துவக்கப்பட உள்ளன.
1 2
|