• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-28 15:53:05    
உலகின் புதிய 7 அதிசயங்கள்

cri

நியூயார்க்கில் நாய் ஓவியக் கண்காட்சி

நியூயார்க்கில் நடைபெறவுள்ள நாய் ஓவியக் கண்காட்சியில் வெவ்வெறான நாய் ஓவியங்கள் பல, காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. சில ஓவியங்கள் ரூபாய் 5 கோடிக்கு மேல் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

நியூயார்க்கில் வரும் 22ம் தேதி நாய் ஓவியக் கண்காட்சி நடைபெற உள்ளது. இது வரை வெளியாகாத பல நாய் ஓவியங்கள், காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இதில் சிறப்பம்சமாக,19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓவியர் சர் எட்வின் லேண்ட்சீர் என்பவர் வரைந்த ஓவியம் ஒன்று இடம் பெறுகின்றது. இந்த ஓவியம் ரூபாய் மூன்றரை கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1880களில் ஜான் சிங்கர் சார்ஜண்ட் என்பவர், நாய் ஓவியம் ஒன்றைத் தீட்டினார். நாயின் உரிமையாளர் லூயிஸ் பர்க்காடுக்காக அவர் இந்த ஓவியத்தை வரைந்து கொடுத்தார். இந்த ஓவியமும் நியார்க் கண்காட்சியில் இடம்பெற உள்ளது. இந்த ஓவியம் ரூபாய் 27 லட்சம் முதல் 36 லட்சம் வரை ஏலம் போகும் என்று மதிப்பிடப் படுகின்றது.

விண்வெளியில் சுனிதா உலக சாதனை

 

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அத்துடன், அதிக முறை விண்வெளி நிலையத்தை விட்டு, விண்ணில் நடந்தமை, அதிக நேரம் பணி செய்தமை, மராதன் போட்டித் தொலைவை ஓடி முடித்தமை போன்ற சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

1996இல், ஷானான் லூசிட் என்ற அமெரிக்க விண்வெளி வீராங்கனை விண்வெளியில் தொடர்ந்து 188 நாட்கள் 4 மணிநேரம் தங்கியிருந்து சாதனை நிகழ்த்தினார். சுனிதா

அதை முறியடித்து விட்டார். கடந்த ஆண்டு டிசெம்பர் 10ஆம் நாள் சுனிதா அட்லாண்டிஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப் பட்டார். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.

 


1 2