• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-29 16:07:06    
மங்கோலிய இன இசைவாளர் யுன் லேங் பு

cri

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, "Tugulejishan" என்னும் மங்கோலிய இன நாட்டுப்புறப் பாடலாகும். இனிமையான இப்பாட்டொலியைக் கேட்டு, விசாலமான பெரும் புல்வெளிக்குச் சென்று, கண்கொள்ளாத பெரும் புல்வெளியையும் வெள்ளை மேகம் போன்ற ஆடுகளையும் பார்த்தது போன்ற உணர்வு தங்களுக்கு ஏற்பட்டதா? சீனாவின் உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த மங்கோலிய இன இசைப்படைப்பாளரும், இசைக்குழு இயக்குநருமான யுன் லேங் பு பற்றி இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

மங்கோலியாவில், யுன் லேங் புவின் இசை படைப்புகளை மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர். மங்கோலிய இனத்தின் ஹஸ் அம்மையார், யுன் லேங் புவை பேட்டி கண்டுள்ளார். அவரது இசை படைப்புகளைக் குறிப்பிட்ட போது ஹஸ் வாயார பாராட்டினார்.

"இப்பாட்டொலி எனது காதில் மிதந்து கொண்டிருக்கும் போதெல்லாம் புல்வெளியின் வாசத்தை உணர்ந்து நீல வானும் வெள்ளை மேகமும் கண்களில் தென்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு, மனச்சுகம் அடைகின்றேன்" என்றார்.

யுன் லேங் பு, உள்மங்கோலியாவின் எழிலான Khorchin புல்வெளியில் பிறந்தார். இவ்விடம், உள்மங்கோலியாவின் புகழ் பெற்ற "ஆடல் பாடல் ஊர்" ஆகும். இங்கு வளர்ந்த அவர், குழந்தைப்பருவத்திலிருந்தே நாட்டுப்புற இசையின் தாக்கத்தால், உற்சாகமடைந்துள்ளார். வளர்ந்த பின், ஒரு இசைவாணராக இருக்க வேண்டும் என்று அவர் உறுதிபூண்டுள்ளார்.

பாடுவதை நேசிக்கும் யுன் லேங் பு, அவரது 14 வயதில் படையில் சேர்ந்து, ஒரு கலை வீரராக மாறினார். நான்கு ஆண்டுகளுக்குப் பின், அதாவது 18 வயதான யுன் லேங் பு, வட கிழக்குச் சீனாவிலுள்ள Lu Xun இலக்கிய கலைக் கல்லூரிக்கு மேற்படிப்புக்காக அனுப்பப்பட்டார். இது முதல், தொழில்முறை கலைத்துறையில் அவர் வளரத் துவங்கினார். படையிலிருந்து விலகிய பின், அவர், உள்மங்கோலிய வானொலி மற்றும் தொலைக்காட்சிக் கலைக்குழுவில் இசைக்குழு இயக்குநராகினார். பல இசை படைப்புகளை இயற்றியுள்ளார். அவர் கூறியதாவது:

"நீண்டகால வரலாறுடைய மங்கோலிய இசையில், Hoomii, மங்கோலிய பாரம்பரிய வரலாற்றுடைய நீண்ட பாடல் ஆகிய இரு ராகங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. பிற தேசிய இனங்களுக்கு அவை இல்லை. ஒத்திசை, நடன நாடகம், குழப்பாடல் ஆகியவற்றை நான் இயற்றுவது உலகத்துக்கு மங்கோலிய இனத்தின் இசையை மேலும் நன்றாக அறிமுகப்படுத்துவதற்காகவே" என்றார்.

உள்மங்கோலியாவில் பிறந்த யுன் லேங் புவைப் பொறுத்த வரை, ஆயர்களின் கூடாரங்கள், அவரது பாட வகுப்பறைகளாகும். நாட்டுப்புறக் கலைஞர்கள் அவருடைய ஆசிரியர்களாவர். விசாலமான புல்வெளி, கண்கொள்ளாத பாலைவனம், வளமான காடுகள் எல்லாம், அவரது இசை படைப்புகளுக்கான ஊற்றுமூலமாகத் திகழ்கின்றன. தேசிய இனத் தனித்தன்மை வாய்ந்த கலை படைப்புகளையும் யுகச் சூழ்நிலை தாண்டவமாடும் படைப்புகளையும் அவர் மாற்றியமைத்தார், இயற்றினார். இப்போது அவரால் மாற்றியமைக்கப்பட்ட பக்க வாத்தியம் இல்லாத குழுப் பாடலான, "தனிமைப்பட்ட வெள்ளை ஒட்டகக் குட்டி" என்ற பாட்டைக் கேட்டு ரசியுங்கள்.

1 2