• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-29 16:07:06    
மங்கோலிய இன இசைவாளர் யுன் லேங் பு

cri

தனது தாயை இழந்த ஓட்டகக்குட்டி தனிமைப்பட்டு அல்லல்படும் நிலையை இப்பாடல் வர்ணிக்கின்றது. உள்மங்கோலிய வானொலி மற்றும் தொலைக்காட்சி கலைக் குழு 2002ம் ஆண்டில் தென் கொரியாவின் Fu Shan நகரில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒலிம்பிக் குழு பாட்டுப் போட்டியில் இப்பாடல் பாடி முதலிடம் பெற்றது.

கடந்த மல்லாண்டுகளில் யுன் லேங் பு மாற்றியமைத்த "நான்கு காலாண்டுகள்" "நான்கு கடல்கள்" போன்ற மங்கோலிய இன நாட்டுப் பாடல்கள், சீனாவின் பல்வேறு இடங்களில் பாடப்பட்டுள்ளன. 1989ம் ஆண்டில் யுன் லேங் பு, தமது மங்கோலிய இன இசை படைப்புகளை, பெய்சிங் இசை மண்டபத்தில் அரங்கேற்றினார். தேசிய இன இசை படைப்பாளர், தனிநபர் ஒத்திசை விழாவை வெற்றிகரமாக நடத்திய முதல் நபர் அவராவார்.

2005ம் ஆண்டு அக்டோபர் திங்களில், சீனப் பண்பாட்டு அமைச்சின் உத்தரவுக்கிணங்க, யுன் லேங் பு, உள்மங்கோலிய வானொலி மற்றும் தொலைக்காட்சி குழுப் பாடல் அணிக்கு தலைமை தாங்கி அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு சீனப் பண்பாட்டு விழாவின் துவக்க விழாவில் அவர்கள் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். யுன் லேங் புவின் படைப்புகள், அமெரிக்காவில் பெரும் எதிரொலிப்பை எழுப்பியுள்ளன. அவருக்கென, அமெரிக்கத் தரப்பு, சிறப்புக் குழுப்பாடல் இசை விழாவை நடத்தியது. அமெரிக்க ரசிகர்கள், யுன் லேங் புவைப் பெரிதும் வரவேற்றனர். முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் போவெல் அவரைச் சந்தித்து வெகுவாக பாராட்டினார்.

1998ம் ஆண்டில், சீனாவின் முதலாவது தேசிய தொழில்முறை குழுப் பாடல் போட்டி, சீனாவின் ஹார்பின் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில், யுன் லேங் புவின் தலைமையிலான குழுப் பாடல் அணி, தலைசிறந்த பாடல் நுட்பத்தினால், திறனாய்வாளர்கள் அனைவரது மனதையும் உருகச் செய்தது.

உள்மங்கோலிய வானொலியின் தலைமை கலை இயக்குநர் Hurile அன்றைய காட்சியை நினைவுகூர்ந்து கூறியதாவது:

"யுன் லேங் பு, உள்மங்கோலியாவுக்கும் மங்கோலிய மக்களுக்கும் புகழை கொண்டு வந்துள்ளார். அப்போட்டி, மக்களை மனமுருகச் செய்தது. தற்செயலாக, போட்டியில் எங்கள் அணி கலந்து கொண்ட போது, மின்சாரம் நின்று விட்டது. அந்த இருளில், அனைத்து ரசிகர்களும் எங்கள் அணியின் பக்க வாத்தியமில்லாத குழுப் பாடலில் கவனம் செலுத்தினர். அனைத்து பாடல்களை பாடி முடித்ததும், ரசிகர்கள் பல முறை கைதட்டி பாராட்டினர்" என்று அவர் கூறினார்.

இன்று யுன் லேங் புவுக்கு 74 வயதாகின்றது. தேசிய இனத்தின் இசைக் கலைக்காக, அவர் இன்னமும் சளையாது பணி புரிந்து வருகிறார். இசைக் கொண்டாட்ட விழா அரங்கில் அவர் பரபரப்பாக இருப்பதைக் காணலாம்.


1 2