• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-04 11:21:20    
தமிழ் மூலம் சீனம் பாடம் 87

cri

கிளிடஸ்........கலை இது வரை நேரம் பற்றி நாம் சுமார் 8 வகுப்புகளில் பயிற்சி செய்துள்ளோம்.

கலை......ஆமாம். ஆனால் இது போதாது. இன்றைய வகுப்பில் நாம் தொடர்ந்து வாக்கியத்துடன் பயிற்சி செய்ய வேண்டும். தமிழ் மூலம் சீனம் புத்தகத்தில் 7வது வகுப்பில் பொருட்காட்சியை பார்வையிடுவது பற்றிய பகுதியை இன்றைய வகுப்பில் முக்கியமாக கற்றுக் கொள்ள வேண்டும்.

கிளிடஸ்.......சரி, பயிற்சி செய்வதற்கு முன் ஏதாவது புதிய சொற்களை கற்றுக் கொள்ள வேண்டுமா?

கலை.......புதிய சொற்களை கற்றுக் கொள்வது புதிய வகுப்பில் உறுதியான நிகழ்ச்சியாகும். அப்படிதானே.

கிளிடஸ்.......ஆமாம். நீங்கள் குறிப்பிடுங்கள்.

கலை.......தமிழில் பொருட்காட்சி என்பதை சீன மொழியில் சென் லான் 展览என்று உச்சரிக்க வேண்டும். பார்வையிடுவது என்ற தமிழ் சொல்லுக்கு சீன மொழியில் கென் 看 என்ற சொல் சமமாகும். ஹோட்டல் என்பதை சீன மொழியில் சொல்ல பின் குவன் 宾馆என்று உச்சரிக்கலாம்.

கிளிடஸ்......கலை இப்போது நீங்கள் மொத்தமாக 3 புதிய சொற்களை குறிப்பிட்டீர்கள்.

கலை.......ஆமாம். அவற்றை நீங்கள் மறுபடி சொல்லுங்கள் பார்க்கலாம்.

கிளிடஸ்.......முயற்சி செய்வேன்.

கலை.......ஹோட்டல் என்பதை சீன மொழியில் எப்படி சொல்லலாம்?

கிளிடஸ்....... ஹோட்டல் என்பதை சீன மொழியில் பின் குவன் 宾馆என்று சொல்ல வேண்டும். அப்படித்தானே.

கலை......முற்றிலும் சரிதான். அப்புறம் பார்வையிடுவது என்ற தமிழ் சொல்லை சீன மொழியில் எப்படி சொல்ல வேண்டும்?

கிளிடஸ்.......பார்வையிடுவதற்கு சீன மொழியில் கென் 看என்று உச்சரிக்க வேண்டும்.

கலை.......சரிதான். கடைசி சொற்கள் என்ன?

கிளிடஸ்......ச்சென் லான் 展览என்ற சொற்கள். இதற்கு தமிழில் பொருட்காட்சி என்று பொருள்.

கலை.......பரவாயில்லை. நன்றாக உச்சரிக்கிறீர்கள். இப்போது நாம் இந்த மூன்று சொற்களை பயன்படுத்தி கொஞ்சம் நீளமான வாக்கியங்களை உருவாக்கலாமா?

கிளிடஸ்.........உருவாக்குங்கள். நான் உங்களை பின்பற்றுகின்றேன்.

கலை.......துவக்கலாம். 
今          天            下        午    我          到        宾         馆           接       你
ச்சின் தியன் சியா வூ வொ டௌ பின் குவன் ஜியே நி
行       吗?
சின் மா?

கிளிடஸ்........இன்று பிற்பகல் நான் ஹோட்டலுக்கு உங்களை அழைக்கலாமா?

கலை.......
不   行         今          天            下       午   我         没有  时      间。
பு ச்சின். ச்சின் தியன் சியா வூ வொ மை ஷ் சியென்.

கிளிடஸ்........முடியாது. இன்று பிற்பகல் எனக்கு நேரம் இல்லை.

கலை......... 
那     明           天      下         午   行       吗?
நா, மின் தியன் சியா வூ சின் மா?

கிளிடஸ்........நாளை பிற்பகல் முடியுமா?

கலை........
明         天           下         午 我        有      空    你 来        吧。
மின் தியன் சியா வூ வொ யூ குன் நி லை பா.

கிளிடஸ்.......நாளை பிற்பகல் எனக்கு நேரம் உண்டு. நீங்கள் வாருங்கள்.

கலை..... ...
明        天              下     午    几   点            到          好?
மிங் தியன் சியா வூ ஜி தியன் டௌ ஹோ?

கிளிடஸ்.......நாளை பிற்பகல் எத்தனை மணிக்கு வர வேண்டும்?

கலை.......
明         天            下       午    三         点         来            就       行。
மின் தியன் சியா வூ சான் தியன் லாய் ஜியூ சின்.

கிளிடஸ்........நாளை பிற்பகல் 3 மணிக்கு வந்தால் போதும்.
மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யுங்கள்.

கலை.......
今          天          下         午     我          到        宾        馆            接        你
ச்சின் தியன் சியா வூ வொ டௌ பின் குவன் ஜியே நி
行        吗?
சின் மா?

கிளிடஸ்........இன்று பிற்பகல் நான் ஹோட்டலுக்கு உங்களை அழைக்கலாமா?

கலை.......
不 行           今        天           下       午      我         没     时     间。
பு ச்சின். ச்சின் தியன் சியா வூ வொ மை ஷ் சியென்.

கிளிடஸ்........முடியாது. இன்று பிற்பகல் எனக்கு நேரம் இல்லை.

1 2