• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-04 15:00:34    
குவாங் சோ நகரின் நீர் வழிப் போக்குவரத்து

cri

குவாங் சோ, தென் சீனாவின் குவாங் துங் மாநிலத்தின் தலைநகராகும். Zhu Jiang ஆறு, இந்நகரின் ஊடாக செல்கின்றது. கடந்த ஏப்ரல் திங்கள், இந்நகரின் சாலைகளில் நெரிசல் நிலைமையைத் தணிவுபடுத்தும் பொருட்டு, Zhu Jiang ஆற்றில், "நீர் வழிப் பேருந்து" என்னும் சிறிய ரக உயர் வேகப் படகு, போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. பழைய ரக பயணியர் படகு, இதனால், பதிலாக்கப்பட்டது. நீர் வழிப் பேருந்து, சுரங்கத் தொடர் வண்டி, பேருந்து ஆகியவற்றினால், குவாங் சோவின் நவீனமயமாக்க நகர பொது போக்குவரத்து வலைப்பின்னல் உருவாகியுள்ளது.

அழகான குவாங் சோ நகர்

2007ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 10ஆம் நாள் காலையில், குவாங் சோ நகரில் Zhu Jiang ஆற்றின் தென் கரையில் உள்ள Zhong Shan Da Xue கப்பல் துறையிலிருந்து, முதலாவது "நீர் வழிப் பேருந்து" புறப்பட்டது.

இந்த சிறிய ரக உயர் வேக படகு, பல பத்து பயணிகளை ஏற்றி, Zhu Jiang ஆற்றின் வட கரைக்குச் சென்றது. இப்போக்கில், இரு கரைகளில் உள்ள பல்வகை கட்டடங்கள் காணப்படலாம். 30 நிமிடங்களுக்குள், "நீர் வழிப் பேருந்து", இறுதிப்புள்ளியான Fang Cun கப்பல் துறையை அடைந்தது. ஆனால், பயணிகள், பேருந்தில் பயணித்தால், குறைந்தது 50 நிமிடம் தேலைப்படுகின்றது.

போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்ட "நீர் வழிப் பேருந்து" மீது நகரவாசிகள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் வசதியை அவர்கள் பாராட்டுகின்றனர். தற்போது நாள்தோறும் பல நகரவாசிகள் "நீர் வழிப் பேருந்தில்" பயணிக்கின்றனர்.
"நீர் வழிப் பேருந்து" போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது, குவாங் சோ நகரவாசிகளுக்கு வழமையான பயணியர் படகு போக்குவரத்தில் புதிய தோற்றத்தை காணச்செய்துள்ளது.

சாதாரண பயணியர் படகு போக்குவரத்து, குவாங் சோ நகரில் 100க்கு அதிகமான ஆண்டுகால வரலாறுடையது. கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரை, குவாங் சோ நகரில் Ren Min பாலம், Hai Zhu பாலம் உள்ளிட்ட, Zhu Jiang ஆற்றின் இரு கரைகளை இணைக்கும் சில பாலங்கள் மட்டுமே இருந்தன. Zhu Jiang ஆற்றின் இரு கரைகளுக்கிடையே பயணியர் படகில் பயணிக்க நகரவாசிகள் விரும்பினர்.

அப்போது, பயணிக்கப்பல் கூட்டு நிறுவனம், நாள்தோறும், ஒரு லட்சம் பயணிகளை உபசரித்தது. இந்த எண்ணிக்கை, குவாங் சோ நகரின் மொத்த பொது போக்குவரத்து அளவில் சுமார் 14 விழுக்காடாகும். பயணியர் படகு கூட்டு நிறுவனத்தில் பணி புரிந்த Deng Xian Yao கூறியதாவது:

"அப்போது, பயணியர் படகு, குவாங் சோ நகரின் முக்கிய போக்குவரத்து சாதனமாகும். பயணிகள் மிக அதிகமாக இருக்கும் போக்குவரத்து நெறிகளில், 800-1000 பயணிகளை ஏற்றிசெல்லக்கூடிய கப்பல்களின் எண்ணிக்கை 6ஐ எட்டியது. பயணிகள் மிக அதிகமாக இருந்த போது, ஓராண்டின் பயணிகளின் எண்ணிக்கை, 10 கோடியைத் தாண்டியது என்று நினைக்கின்றேன்" என்றார், அவர்.

ஆண்டுக்கு 10 கோடிக்கு மேலான பயணிகளின் எண்ணிக்கை, சீனாவின் பயணியர் படகு வரலாற்றில் மிக அரிதானது.

1 2