ஆனால், இந்த நிலைமை படிப்படியாக மாறியுள்ளது. கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில், Zhu Jiang ஆற்றின் இரு கரைகளை இணைக்கும் பாலங்களும், குடைவழிகளும் அதிகரித்து, தரைப் போக்குவரத்து நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது, 1993ஆம் ஆண்டு முதல், குவாங் சோ நகரில் பயணியர் படகு மூலம் Zhu Jiang ஆற்றின் இரு கரைகளுக்கிடையே பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை, ஆண்டுக்கு 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரையான வேகத்துடன் படிப்படியாக குறைந்து வந்துள்ளது. இரு கரைகளின் கப்பல் துறைக்கு அருகில் பணி புரிந்த தொழிலாளி மட்டும் பயணியர் படகில் பயணிக்கின்றனர். Zhu Jiang ஆற்றின் பயணியர் படகு போக்குவரத்து, குவாங் சோ நகரில் படிப்படியாக காணாமல் போகிறது என்பதில் மக்கள் கவலைப்படுகின்றனர்.
வரலாற்றின் வளர்ச்சி, குவாங் சோ நகரின் நீர் வழிப் பயணியர் போக்குவரத்துக்கு புதிய வாய்ப்பை தந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, வண்டிகளின் அதிகரிப்புடன், இந்நகரின் சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. Zhu Jiang ஆறு, இந்நகரின் ஊடாகச் செல்லும் மேம்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி, "புதிய நீர் வழி பயணியர் போக்குவரத்து பாதையை" உருவாக்க குவாங் சோ நகராட்சி அரசு முடிவு எடுத்தது.
"நீர் வழிப் பொது போக்குவரத்து" பற்றிய நகராட்சி அரசின் திட்டத்தை நகரவாசிகள் ஆக்கப்பூர்வமாக ஆதரிக்கின்றனர். நகரவாசிகளுக்கு பல்வகைத்தன்மையுடைய போக்குவரத்துச் சேவையை வழங்கி, நகரின் சாலைகளில் போக்குவரத்து நிர்ப்பந்தத்தைத் தணிவுபடுத்தும் பொருட்டு, கடந்த ஆண்டு, குவாங் சோ நகரின் மக்கள் பேரவை பிரதிநிதிகள் பலர், "நீர் வழிப் பேருந்து திறந்து விடப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர். Sun Shi Sheng, அவர்களில் ஒருவராவார். அவர் கூறியதாவது:

"குவாங் சோ நகரில் இத்தகைய அதிகமான ஆறுகளின் வலைப்பின்னல், மேம்பாட்டுடைய இயற்கை வளமாகும். பொது போக்குவரத்து முறைமையை நிறைவு செய்யும் பொருட்டு, இதைப் பயன்படுத்த வேண்டும்." என்றார், அவர்.
கடந்த ஏப்ரல் 10ஆம் நாள், "நீர் வழி பேருந்தின்" முதல் பயணம் வெற்றி பெற்றது. குவான் சோ நகரில் நீர் வழிப் போக்குவரத்து, புதிய வளர்ச்சி கட்டத்தில் நுழைந்தது. இது வரை, நீர் வழிப் போக்குவரத்து நெறிகள் அதிகமாக இல்லை என்ற போதிலும், நீண்டகால திட்டத்தை அரசு வகுத்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள், குவாங் சோ நகரில் Zhu Jiang ஆற்றின் பகுதியில் கப்பல் துறைகளின் எண்ணிக்கை, தற்போதைய 28லிருந்து, 65ஆக அதிகரிக்கப்படும்.
குவாங் சோ நகரின் "நீர் வழிப் பேருந்து", போக்குவரத்து வளர்ச்சியின் தேவையாக அமைவது மட்டுமல்ல, இந்நகரின் நடையுடை பாவனைகளையும் அது வெளிக்கொணர்கின்றது. "நீர் வழிப் பேருந்தில்" பயணித்து, இரு கரைகளின் காட்சிகளைக் கண்டு ரசிப்பது, குவான் சோ நகரவாசிகளின் வாழ்க்கையில் எழில் ஊட்டுவதாக அமைகின்றது. 1 2
|