• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-05 07:51:14    
உலகில் மிக நீளமான குடை வழி

cri

உலகில் மிக நீளமான குடை வழி

உலகில் மிக நீளமான குடை வழியான ஸ்விட்சர்லாந்தின் LOETSCH குடை வழி, அண்மையில் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஆல்ப்ஸ் மலக்கூடாகச் செல்லும் இக்குடை வழியின் முழு நீளம் 34.6 கிலோமீட்டர். இந்தக் குடைவு இருப்புப் பாதையைக் கட்டிமுடிக்க 8 ஆண்டு காலம் பிடித்தது. மொத்தம் 430 கோடி சுவீஸ் பிராங்கு செலவிடப் பட்டது. ஜெர்மனிக்கும் இத்தாலிக்குமிடையிலான தொடர் வண்டிப் பயண நேரம், 3.5 மணி நேரத்திலிருந்து 2 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சரக்குத் தொடர் வண்டி, மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலும், பயணியர் தொடர் வண்டி, மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்திலும் இக்குடை வழிக்கு ஊடாகச் செல்லக் கூடும் எனப்படுகின்றது.

சீனாவில் திருமணம் பற்றிய அறிக்கை

2006ஆம் ஆண்டுக்கான பொதுப் பணித்துறையின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபர அறிக்கையைச் சீனப் பொதுத் துறை அமைச்சகம் மே 23ஆம் நாளன்று வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையின் படி, கடந்த ஆண்டு சீனாவில் 94 லட்சத்து 50 ஆயிரம் இணைகள் திருமணம் செய்தனர். இது, 2005ஆம் ஆண்டை விட 12 லட்சத்து 19 ஆயிரம் அதிகமாகும்.

திருமணப்பதிவு செய்யப்பட்ட குடி மக்களில் 20 முதல் 24 வயதுடையவர்கள் 39.4 விழுக்காடு வகித்தனர்.

கடந்த ஆண்டு சீனாவில் 19 லட்சத்து 13 ஆயிரம் தம்பதிகள் மண முறிவு செய்தனர். இந்த எண்ணிக்கை, 2005ஐ விட ஒரு லட்சத்து 28 ஆயிரம் அதிகமாகும். லியோனிங், ஜியான்சு, சாந்துங், ஹேனான், சிச்சுவான் ஆகிய மாநிலங்களில் மண முறிவுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

1 2