• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-05 07:51:14    
உலகில் மிக நீளமான குடை வழி

cri

கருசிதைவுற்ற பண்டா

6 வயது இராட்சதப் பண்டாவான யாயாவுக்கு, கருச்சிதைவுற்றதாக, அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தைச் சேர்ந்த மன்ஃபிஸ் விலங்கியல் பூங்கா ஜூன் 13ஆம் நாள் அறிவித்துள்ளது. விலங்கியல் பூங்காவின் கால்நடை மருத்துவர்களும் வல்லுநர்களும் மீ ஒலி அலை சோதனை மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் இவ்விலங்கியல் பூங்கா முழுமையும் துக்கக் கடலில் மூழ்கியுள்ளது

சீன மொழியில் இராட்சதப் பண்டாவுக்குப் பெரிய கரடிப்பூனை என்று பெயர். இது, சீன நாட்டின் கருவூல விலங்கு என்று போற்றப்படுகின்றது.

யாயாவும் 8 வயது ஆண் பண்டாவான லெலெவும் 2003ஆம் ஆண்டு சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்லப் பட்டன. பின்னர், இவ்விலங்கியல் பூங்காவில் வாழ்ந்து வருகின்றன.

இவற்றின் இனப்பெருக்கத்திற்காக, பணியாளர்கள் பெரிதும் பாடுபட்டுள்ளனர்.

"யாயா கருத்தரித்தும் குட்டி ஈன முடியவில்லை.இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த ஆண்டு தொடர்ந்து முயற்சி செய்வோம்"என்று மன்ஃபிஸ் விலங்கியல் பூங்காவின் தலைவர் பிரேடி தெரிவித்தார்.

வாரத்தின் சிறந்த மனிதர் சுனிதா

"இந்த வாரத்தின் சிறந்த மனிதர் சுனிதா" என்று அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஜூன் 24ஆம் நாள் அறிவித்து.

அட்லாண்டிஸ் விண்கலம் ஜூன் 23ஆம் நாள் நள்ளிரவு 1:20 மணிக்குப் பத்திரமாகத் தரையிறங்கியது. இது நிகழ்ந்த ஒரு மணி நேரத்துக்குள் அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஏபிசி, இந்த வாரத்தின் சிறந்த மனிதராக 41 வயது நிரம்பிய சுனிதாவை அறிவித்தது.

விண்வெளியில் 195 நாட்கள் தங்கி,29 மணி 17 நிமிடங்கள் நடை போட்ட வீராங்கனை என்ற சிறப்பைச் சுனிதா பெற்றுள்ளார். அவர் விண்வெளியில் நடந்தது மட்டுமின்றி, முதன்முறையாக ஓடியும் சாதனை படைத்துள்ளார். சுனிதாவின் தங்கை தினா பாண்டியா கடந்த ஏப்ரல் 16ஆம் நாள் நடைபெற்ற மராதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார். அதேநாள், சுனிதாவும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு வெளியே மராதன் ஓட்டம் ஓடினார். பூமியில் உன்னால் ஓடும் போது என்னால் விண்வெளியிலும் ஓட முடியும் என்று அறைகூவல் விட்டு, சுனிதா வெற்றி பெற்றார் என்று தினா பாண்டியா கூறியதை ஏபிசி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

முதல் வளைகுடா போரின் போது அமெரிக்க விமானப் படையில் ஹெலிகாப்டர் ஓட்டியவர் என்பது குறிப்பிடத் தக்கது.அட்லாண்டிஸ் விண்கலம் தரையிறங்குவதில் ஏற்பட்ட சிக்கலையடுத்து, பிரார்த்தனை செய்யாத நாடு இல்லை என்று சுனிதாவின் தந்தை பாண்டியா கூறியதையும் ஏபிசி ஒளிபரப்பியது.

சுனிதா வில்லியம்சும் அவரது குடும்பத்தினரும் விரைவில் இந்தியா வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


1 2