• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-06 16:37:58    
குரான் திருமறை

cri

மேற்குச் சீனாவின் சிங்ஹேய் மாநில சியுன் ஹுவா சால இனத் தன்னாட்சி மாவட்டத்தில் சீனாவின் பழமைமிக்க "குரான் திருமறையின்" கையெழுத்துப் பிரதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலம், பின்தங்கிய பாதுகாப்புச் சாதனம் ஆகியவற்றால், இந்த "குரான் திருமறையின்" சில பகுதிகள், பாழடைந்து தெளிவற்றுள்ளன. அண்மையில், சீனாவின் சில தொல் பொருள் பாதுகாப்பு நிபுணர்களின் முயற்சியுடன், இத்திருமறை, செவ்வனே செப்பனிடப்பட்டுள்ளது.

சிங்ஹேய் மாநில சியுன் ஹுவா சால இனத் தன்னாட்சி மாவட்டம், சீனாவின் சால இனத்தவர்கள் கூடிவாழும் இடமாகும். ஏறக்குறைய 70, 80 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டது இவ்வினம். சால இன மக்கள், இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்டவர்கள். 700 ஆண்டுகளுக்கு மேலாக சால இனத்தின் முன்னோடிகள், தொலைவிலிருந்து, அதாவது மத்திய கிழக்கிலிருந்து கிழக்கை நோக்கி குடியேறியபடி, சியுன் ஹுவா மாவட்டத்தின் சுற்றுப்புறத்தை அடைந்த போது, இங்கு சமவெளியையும், இங்கும் அங்குமாக ஓடும் ஆறுகளையும் வளைந்து செல்லும் மலைகள் காடுகளையும் கண்டனர். ஊற்று நீரின் அருகே சென்று, ஊற்று நீரின் சுவை பார்த்து மகிழ்ந்தனர். திடீரென, தம்முடன் வந்த ஒரு ஓட்டகம் ஊற்று நீரின் ஓட்டத்தில் படுத்து, அதன் இரு முதுகு உச்சிகளும் நீர்ப்பரப்பின் மேல் நீடித்து வெள்ளை கல்லாகியுள்ளதை அவர்கள் கண்டார்கள். இக்கல்லின் மீது "குரான் திருமறையின்" கை எழுத்து பிரதி தென்படுகின்றது. இத்தொன்மையான நூலைக் கண்டு சால இன முன்னோடிகள் உணர்ச்சிவசப்பட்டு, பின்னர், இங்யே குடியேறினர் என்று தெரிய வருகின்றது.

சியுன் ஹுவா சால இனத் தன்னாட்சி மாவட்டத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த "குரான் திருமறையில்" மொத்தம் 30 தொகுதிகள் அடங்கும். 12 கிலோகிரோம் எடையுடைய இந்நூலில் மொத்தம் 867 பக்கங்கள் உள்ளன. மேல் கீழ் ஆகிய இரு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனாவின் தொல் பொருள் நிபுணர்கள் "குரான் திருமறையின்" கை எழுத்து பிரதியை சரிப்படுத்தினர். கி. பி. 8ம் நூற்றாண்டுக்கும் 13ம் நூற்றாண்டுக்குமிடையில் இந்த கையெழுத்து பிரதி "படைக்கப்பட்டிருக்கலாம்" என்று நிபுணர்கள் கருதினர். இது வரை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட பழமைமிக்க "குரான் திருமறையின்" கை எழுத்து பிரதியாகும் என்று அவர்கள் தெரிவித்தனர். சிங்ஹேய் மாநிலத்தின் சால இன பழக்க வழக்க நிபுணர் ஹென் ச்சாங் சியாங் செய்தியாளரிடம் பேசுகையில், இப்பழமையான "குரான் திருமறை", இஸ்லாமிய நாடுகளில் புனிதமான தகுநிலையை உடையது என்றார்.

இக்"குரான் திருமறைக்கு"ச் சமமானவை, உலகில் மூன்று உள்ளன. முன்னாள் சோவியத்யூனியன், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றிலும் கை எழுத்து பிரதி ஒன்று உள்ளது. 1954ம் ஆண்டில் சிரிய நாட்டில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தொன் நூல் படைப்புகளின் கண்காட்சியில், எங்கள் இந்த "குரான் திருமறையின்" கை எழுத்து பிரதி, சீனாவின் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. உண்மையில், இது சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி காண்பிக்கப்பட்டது. 1962ம் ஆண்டில் ஈரானிலும் இது போன்ற கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது" என்று அவர் கூறினார்.

1 2