• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-06 16:37:58    
குரான் திருமறை

cri

"குரான் திருமறையின்" கை எழுத்து பிரதி, 700 ஆண்டுகளை கடந்து விட்டது. பல இடங்களில் எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் உள்ளன. காப்பாற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நீண்டகாலமாக, சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள், இக்"குரான் திருமறை" மீது பெரும் கவனம் செலுத்தின. சீனத் தேசிய தொல் பொருள் பணியகமும், இத்திருமறையைப் பாதுகாப்பதற்காக, 15 லட்சம் யுவானை முதலீடு செய்யவுள்ளது. அண்மையில், சீனாவின் தொல் பொருள் பாதுகாப்பு நிபுணர் Xi San Cai, நான் ஜிங் அருங்காட்சியகத்தின் இதர சில நிபுணர்களுக்கு தலைமை தாங்கி, இக்"குரான் திருமறை" பிரதியைப் பாதுகாத்து மேம்படுத்தினார்.

இயற்பியல் முறையில் முக்கியமாக இப்பிரதியை பாதுகாக்க வேண்டும். இது மிகவும் மதிப்புடையது என்பதால், அதன் இயல்பான தோற்றத்தை பேணிக்காக்க வேண்டும். கூடிய அளவில் இதை மாற்றாமல் இருக்க வேண்டும்" என்றார்.

நிபுணர்கள் குழு, பாரம்பரியத் தொழில் நுட்பத்தையும் நவீன அறிவியல் தொழில் நுட்பத்தையும் ஒன்றிணைக்கும் முறையில், இக்கை எழுத்து பிரதியைச் சுத்தம் செய்து, நச்சு நீக்கி, பூச்சிகளைக் கொன்று, பழுது பார்த்து, சீர்படுத்தியது. இதனால், அதற்கான பாதுகாப்பு பணியை அவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

சால இன மக்களின் தேசிய இன உணர்வையும், இத்தொன் நூலுடன் அவர்கள் கொண்டுள்ள சிறப்பு வரலாற்று உறவையும் கருத்தில் கொண்டு, சீன அரசும் உள்ளூர் வாரியங்களும், உள்ளூரில் அதனைப் பாதுகாப்பதற்கான கோட்பாட்டினை முன்வைத்தன. செங் வான் மாவட்டத்து மதவியல் பணியகத்தின் தலைவர் ஹங் யுன் சு அறிமுகப்படுத்தியதாவது:

"சால இனத்தின் வரலாறும், இந்த "குரான் திருமறையின்" கையெழுத்து பிரதியும் நெருங்கி ஒன்றிணைந்துள்ளன. இக்"குரான் திருமறையை", தங்களின் தேசிய இனத்தின் ஒரு பகுதியாக அவர்கள் கருதுகின்றனர். உள்ளூர் பாதுகாப்பு என்பது, தேசிய இன உணர்வை நெருக்கமாக்க முடியும். அன்றி, அவர்களின் மதவியல் உணர்வையும் மதிப்பிடலாம்" என்றார், அவர்.

சீராக்கப்பட்டுள்ள இந்த "குரான் திருமறை" சிங்ஹேய் மாநிலத்து சால இனத் தன்னாட்சி மாவட்டத்தில் புதிதாக கட்டியமைக்கப்பட்ட "குரான் திருமறை" அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தவிரவும், நிபுணர்கள், நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு, மற்றொரு பிரதியை படியாக்கம் செய்யவுள்ளனர்.

நங்கின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல் பொருள் பாதுகாப்பு நிபுணர் Xi San Cai பேசுகையில், சால இனத்தின் இக்"குரான் திருமறையை" பழுதுபார்த்து செப்பனிடும் பணி பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். இக்"குரான் திருமறை" சால இனத்தின் தோற்றம், வரலாறு ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு முக்கிய பங்களிக்கும். அன்றி, உலக இஸ்லாமிய மதப் பண்பாட்டின் ஆராய்ச்சிக்கும் இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.


1 2