• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-09 16:36:38    
பள பளக்கும் பற்கள்

cri

அப்படி போடு அருவாள என்று நினைப்பவர்களுக்கு, ஐயா சாமி, ஆபத்து சாமி என்கின்றனர் வல்லுனர்கள். இன்றைக்கு சந்தையில் உள்ள, பற்களை தூய்மைப்படுத்தும், வெண்மைப்படுத்தும் பொருட்களில் 90 விழுக்காட்டு பொருட்களில் அளவுக்கு மீறிய ப்ளீச் எனப்படும் தூய்மை செய்யும் வேதியல் பொருள் இருப்பதாக வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். அளவுக்கு அதிகமாக இருந்தால் சீக்கிரம் நம் பற்கள் வெண்மையாகிவிடுமே என்றெல்லாம் இங்கே பக்கவாத்தியம் வாசிக்க முடியாது. இந்த வேதியல் பொருள் தலைமுடியை தங்க நிற்மாக மாற்றப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். ஆனால் இது நமது பற்களில் பயன்படுத்தப்படும்போது, வாயில் புண்கள் ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் உண்மை. சிகையலங்காரத்துறையில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதியல் பொருள், பற்களை வெண்மையாக்கும் திரவங்கள் என்று விளம்மபர்ப்படுத்தப்பட்டு சந்தையில் விற்பனையாகும் பொருட்களிலும் உள்ளதாம்.

இன்றைக்கு திரைப்படங்களில், தொலைக்காட்சியில் நம் உள்ளம் கவர்ந்த நட்சத்திரங்கள் பளீரிடும் வெண்மையான பற்கள் தெரிய சிரிப்பதை பார்த்து நாமும், அதேபோல் வெண்மையான பற்கள் வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த நட்சத்திரங்கள் பணம் அதிகம் செலவழித்து, பல மருத்துவரிடம் சென்று முறைப்படி பற்களை வெண்மையாக்கக்கியிருக்க, நமக்கு சந்தையில் நாமே பயன்படுத்தி வெண்மையாக்கக்கூடிய பொருட்கள் கிடைத்தால் நாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிடவா போகிறோம்.

1 2 3