• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-12 15:07:31    
உலகில் மிக நீளமான கடல் பாலம்

cri
உலகில் மிக நீளமான கடல் பாலம்

உலகில் மிக நீளமான கடல் பாலம், சீனாவின் செ ஜியாங் மாநிலத்திலுள்ள ஹோன்சோ வளைகுடாவில் கட்டி முடிக்கப்பட உள்ளது.

வடக்கே இம்மாநிலத்து ஜாசிங் நகரிலிருந்து தெற்கே அதன்

நின்போ நகர் வரை ஹோன்சோ வளைகுடாவைக் குறுக்கே கடந்து செல்லும் இப்பாலத்தின் முழு நீளம், 36 கிலோமீட்டர். உலகில் மிக நீளமான கடல் பாலம் இதுவே என்பது குறிப்பிடத் தக்கது.

இரு திசைகளிலும் தலா 3 வழிப்பாதைகள் கொண்ட உயர்வேக நெடுஞ்சாலை என்ற வரையறைக்கு இணங்க, இப்பாலம் வடிவமைக்கப் பட்டது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வண்டிகள் ஓடவல்ல இப்பாலத்தின் பயன்பாட்டுச் காலம், 100 ஆண்டுகள். இதைக் கட்டியமைக்க மொத்தம் 1180 கோடி யுவான் முதலீடு செய்யப் பட்டுள்ளது.

கடந்த ஜுன் 26ஆம் நாள், இப்பாலத்திலான உருக்கு உத்திர கட்டமைப்புகள் அனைத்தும் பற்றவைக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கு முன், ஹோன்சோ வளைகுடா பாலம், போக்குவரத்துக்குத் திறந்து விடப்படும் என்று தெரிய வருகிறது.

சீனாவில் 50 லட்சம்

தனியார் தொழில் நிறுவனங்கள்

இவ்வாண்டு மார்ச் திங்கள் இறுதி வரை, சீனாவில் பதிவு செய்யப்பட்ட தனியார் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 50 லட்சத்து 44 ஆயிரத்தை எட்டியுள்ளது. அவற்றின் மொத்த முதலீட்டுத் தொகை, 7லட்சத்து 90 ஆயிரம் கோடி யுவானாகும். தனியார் தொழில் நிறுவனங்கள் செலுத்திய மொத்த வரித் தொகை, 15579 கோடி யுவானை அடைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்தை விட 36.6 விழுக்காடு அதிகமாகும். நாட்டின் மொத்த வரித் தொகையில் 9.1விழுக்காடு வகிக்கிறது.

அரசு சாரா பொருளாதாரம், சீனப் பொருளாதார அதிகரிப்பை விரைவுபடுத்தும் முக்கிய ஆற்றலாக மாறியுள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அது வகிக்கும் விகிதம் 60 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.

1 2