• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-12 15:07:31    
உலகில் மிக நீளமான கடல் பாலம்

cri

தனியார் தொழில் நிறுவனங்கள் முக்கியமாக இலகு ரக தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ளன. இப்போது சில பெரிய ரக தனியார் தொழில் நிறுவனங்கள், கன ரக வேதியியல் தொழிற்துறை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட துறைகளுக்கு விரிவடையத் துவங்கியுள்ளன.

சிங்கப்பூரில் கேளிக்கை விடுதிகளிலும்

புகைபிடிக்கத் தடை

சிங்கப்பூரில் கேளிக்கை விடுதிகளிலும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டிற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அங்கு பொது இடங்களில் புகை பிடிக்கவும், இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தத் தடை ஆணை, கேளிக்கை விடுதிளிலும் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

'புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் வருகின்றன. இதனால் அதன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூர் அரசு கூறி வருகிறது. புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தப் பல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது

தற்போதைய நடவடிக்கை, இதன் ஒரு பகுதி தான் ' என்று சிங்கப்பூர் சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் நலவாழ்வு நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் சுற்றுச் சூழல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'அரசின் இந்தப் புதிய நடவடிக்கை, புகையிலை தீங்கில் இருந்து பொது மக்களை மட்டுமல்லாது, பொது மற்றும் கேளிக்கை விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்களையும் பாதுகாக்க வழிவகுக்கும் ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அரசின் இந்தப் புதிய நடவடிக்கையை அங்குள்ள சில பெரிய கேளிக்கை விடுதிகளின் முதலாளிகளூம் வரவேற்றுள்ளமை அறியத் தக்கது.

ஆஸ்திரேலியாவில் மனித கரு படியாக்கம்

மருத்துவ காரணங்களுக்காக மனித கரு படியாக்கம்(குளோனிங்) செய்யலாம் என ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய மாநிலங்களில் இத்தகைய ஒப்புதல் அளித்த முதல் மாநிலம் என்ற பெருமை, விக்டோரியாவுக்குக் கிடைத்துள்ளது.

மனச்சிதைவு மற்றும் பார்க்கின்சன் போன்ற பல்வேறு உடலியக்கக் கோளாறு நோய்களுக்கான சிகிச்சைக்காக, 'ஸ்டெம்செல்களை' உருவாக்க புதிய சட்டம் அனுமதிக்கிறது.

முன்னதாக, ஸ்டெம்செல் ஆராய்ச்சிக்காக மனித கருவைப் படியாக்கம் செய்வதற்கு நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டு தடையை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கடந்த டிசம்பரில் நீக்கியது, குறிப்பிடத் தக்கது.


1 2