• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-13 17:02:24    
பெய்சிங்கில் 20 சிங்கியாங் உய்குர் இனக் குழந்தைகளின் வாழ்க்கை

cri

இரண்டு ஆண்டுகளுக்கு முன், 14, 15 வயதுடைய 20 சிங்கியாங் உய்குர் இன குழந்தைகள், தேசிய இனப் பண்பாட்டுக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன், பெய்சிங் மாநகருக்கு வந்து, தத்தமது படிப்பை துவக்கினர். இன்று இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. குழந்தைகளின் வாழ்க்கை நிலை எப்படியுள்ளது? அவர்கள் அடைந்த நன்மை என்ன? ஆகிய கேள்விகளுடன் எமது செய்தியாளர், பெய்சிங் மாநகர தேசிய இனப் பண்பாட்டுக் கலைத் தொழில் பள்ளிக்கு சென்று குழந்தைகளைப் பார்த்தார்.

"தேசிய இன ஒற்றுமை வகுப்பு" என்ற பலகை தொங்கவிடப்பட்டுள்ள ஒரு வகுப்பறையின் வாசலில், படிப்பு சத்தம் கேட்கின்றது. இப்பள்ளி, பெய்சிங் நகரத்தில், சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கென இடைநிலை தொழில் நுட்பத் திறமைசாலிகளையும், கலைஞர்களையும் பயிற்றுவிக்கும் ஒரே ஒரு தொழில்முறை பள்ளியாகும். சிங்கியாங்கிலுள்ள சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடும் வகையில், பெய்சிங் மாநகர தேசிய இனப் பண்பாட்டுக் கலைத் தொழில்முறை பள்ளி, திறமைசாலிகளை பயிற்றுவிக்கும் கடமைக்கு சுய விருப்பத்துடன் தோள்கொடுத்துள்ளது. 2005ம் ஆண்டு, சிங்கியாங்கின் He Tian என்னுமிடத்திலுள்ள வறிய பிரதேசத்தில் இப்பள்ளி, கலை ஆற்றல் மிக்க 20 உய்குர் இனக் குழந்தைகளைச் சேர்த்துள்ளது. அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. பெய்சிங்கில் அவர்கள் முறைப்படி கற்றுக்கொண்டு தத்தமது கலை நுட்பத்தை உயர்த்த இப்பள்ளி விரும்புகிறது.

பெய்சிங் நகர தேசிய இனப் பண்பாட்டுக் கலைத் தொழில் பள்ளியின் வேந்தர் Xue Bao Xiang இது பற்றி அறிமுகப்படுத்திய போது, இதர வகுப்பு மாணவர்களை போல, இக்குழந்தைகள் பண்பாட்டு அறிவைக் கற்றுக்கொள்வது தவிர பாடல் நடனம் ஆகியவற்றை தொழில் முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 

"உய்குர் இனத்தவர்கள், ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்றவர்கள். எனவே, அவர்கள் தமது தனித்தன்மையை வெளிக்கொணர வேண்டும் என்று விரும்புகின்றோம். பெய்சிங்கில் வேலை வாய்ப்புகளைப் பெறச் செய்வதற்காக முக்கியமாக, அவர்களின் கலைத்திறனைப் பயிற்றுவிக்கப் பாடுபடுகின்றோம்" என்றும் அவர் கூறினார்.
இக்குழந்தைகள் சிங்கியாங்கில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தொலைத்தூரத்துக்குப் போனதில்லை. சில குழந்தைகள், He Tian என்ற இடத்தைக்கூட விட்டுப் போனதில்லை. எனவே, இக்குழந்தைகள் இப்போது பெய்சிங்கில் இருக்கையில், தத்தமது குடும்பத்தினர்களை மிகவும் நினைக்கின்றனர். பள்ளி அவர்களுக்கு தொலை பேசி அட்டை வழங்கியது. இதன் மூலம் இக்குழந்தைகள், அடிக்கடி தமது குடும்பத்தினர்களுடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். உய்குர் இனத்தின் உணவுப் பொருட்களில் முக்கியமாக, மாவு பொருளும் இறைச்சியும் இடம்பெறுகின்றன. பள்ளி அவர்களுக்கு தயாரித்த அரிசி-காய்கறிகளை அவர்கள் விரும்பவில்லை. எனவே, விழா நாட்களிலும் விடுமுறைகளிலும் குழந்தைகள் விரும்பும் உய்குர் இன உணவுகளை பள்ளி தயாரித்து வழங்குகிறது.

பள்ளியின் ஏற்பாட்டில், குழந்தைகள், சில நடவடிக்கைகளில் அடிக்கடி கலந்து கொள்கின்றனர் என்று வேந்தர் கூறினார்.

"தேசிய விழாவில் படையின் முகாமில் அவர்கள் குழு நடவடிக்கையில் கலந்து கொண்டு, மலை ஏறினர், பெரும்சுவரில் சுற்றுலா செய்தனர். தியானன்மென் சதுக்கத்தில் தேசியக் கொடி ஏற்றத்தைப் பார்வையிட்டனர். அரண்மனை, கோடைக்கால மாளிக்கை பெய் ஹ பூங்கா ஆகியவற்றில் அவர்கள் சுற்றுலா செய்தனர். இந்நடவடிக்கைகள் மூலம், தத்தமது வீட்டில் இருப்பது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது" என்று அவர் கூறினார்.

1 2