• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-13 17:02:24    
பெய்சிங்கில் 20 சிங்கியாங் உய்குர் இனக் குழந்தைகளின் வாழ்க்கை

cri

யாங் பெய என்பவர், இந்த 20 உய்குர் இனக் குழந்தைகள் படிக்கும் வகுப்பின் ஆசியராவார். பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும், இக்குழந்தைகளை, தமது பிள்ளைகளாகக் கருதுகின்றனர் என்றும், அவர்கள் மீது பேரக்கறை காட்டுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது: 

"ஒரு முறை எங்கள் வகுப்பின் ஒரு குழந்தைக்கு குடல்முனை வீக்க நோய் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, தொலைபேசி மூலம் தமது குடும்பத்தினர்களுடன் தொடர்பு கொண்டு, பணம் கோரினார். வீட்டில் அவ்வளவு பணமில்லை என்பதால், பள்ளி உடனுக்குடன் காசோலை கொடுத்தது. பிற்பகல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டார். ஆசிரியர்கள் முதல் வேந்தர் வரை அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே காத்திருந்தனர். அவர் மருத்துவ மனையில் 7 நாள் தங்கிய போது, ஆசிரியர்கள் 24 மணிநேரம் இருந்தனர்" என்று அவர் கூறினார்.

பெய்சிங்கில் சுமார் இரண்டு ஆண்டுகாலம் வாழ்ந்துள்ள இக்குழந்தைகள் வேறுபட்ட அனுபவங்களை பெற்றுள்ளனர். Rustam என்னும் ஒரு மாணவர் செய்தியாளரிடம் கூறியதாவது: 

"வாழ்க்கையில் பலவற்றை கற்றுக்கொண்டுள்ளோம். இப்போது, நாங்கள் தனியாக வாழ்க்கை நடத்த முடியும். வாழ்க்கையிலுள்ள சில இன்னல்களை சொந்தமாக சமாளிக்க முடியும்" என்றார்.
வகுப்புத் தலைவர் Alijan பேசுகையில், நடனத்துறையில் தாம் பெரும் முன்னேற்றடைந்ததாகக் கருதினார். அவர் கூறியதாவது:

"பெய்சிங் வருவதற்கு முன், நான் நடனமாடவில்லை. இங்கு வந்து நான் நடனக்கலை பாடத்தைத் தெரிவு செய்தேன். மெதுவாகக் கற்றுக்கொண்டே இருக்கின்றேன். இப்போது நான் நடனக்கலை பாடத்தின் பிரதிநிதியாக இருக்கின்றேன். ஆசிரியர்களும் என்னை மிகவும் நேசிக்கின்றனர். பெரும் முன்னேற்றமடைந்ததை உணர்ந்து கொண்டுள்ளேன்" என்று அவர் கூறினார்.

 

விதவிதமான பாடல் ஆடல் அரங்கேற்றங்களில் பங்கெடுப்பது, குழந்தைகளை மிகவும் உற்சாகமடையச் செய்கின்றது. வெளிநாட்டு விருந்தினர்கள் பள்ளிக்கு வருகை தரும் போதெல்லாம், அவர்கள் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதாக Rustam கூறினார். கடந்த மே திங்களில் பெய்சிங் கலை விழா போட்டியில் அவர்கள் அரங்கேற்றிய உய்குர் இன நடனம், இக்கலை விழாவில் முதலிடம் பெற்றமை, அவரின் மனதில் ஆழப் பதிந்துள்ளது.

இப்போது இக்குழந்தைகள் தத்தமது பாடுபடும் இலக்கைக் கொண்டுள்ளனர். "பெய்சிங்கில் தங்கியிருந்து மேலதிகமான அறிவுகளைக் கற்றுக்கொண்டு, பின்னர் ஊர் திரும்பி மேலதிகமானோருக்கு கற்பித்து ஊரை வளர்ச்சியுறச்செய்ய வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.


1 2