ஏப்ரல் திங்களில், சீன மத்தியப் பகுதியின் ஹேநான் மாநிலத்தின் Zheng zhou நகரத்தில், சீன மத்தியப் பகுதியின் இரண்டாவது முதலீட்டு வர்த்தகப் பொருட்காட்சி நடைபெற்றது. Microsoft, Metro, Carrefour உட்பட, உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் 300க்கும் மேற்பட்டவை, இதனால் ஈர்க்கப்பட்டு, இதில் கலந்து கொண்டன. சீன மத்தியப் பகுதி, அந்நிய வணிகர்கள் கவனம் செலுத்தும் புதிய மண்டலமாக மாறியுள்ளது.
சீன மத்தியப் பகுதியில், ஷான்சி, ஆன்ஹுய், ஜியாங்சி, ஹேநான், ஹூபேய், ஹூநான் ஆகிய 6 மாநிலங்கள் இடம் பெறுகின்றன. இவற்றின் மொத்த நிலப்பரப்பு, 10 லட்சத்து 28 ஆயிரம் சதுர கிலோமீட்டர் ஆகும். மக்கள் தொகை, 36 கோடி.
சீனாவிலுள்ள இந்தோனேசிய தூதரகத்தின் பொருளாதார பிரிவைச் சேர்ந்த Arifianto Scofiyanto அவர்கள் முதல் முறையாக சீன மத்தியப் பகுதிக்குச் சென்று, இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டார். Zheng zhou நகரத்தின் வளர்ச்சி நிலையைக் கண்டதும், அவர் வியப்படைந்தார்.
"சீன மத்தியப் பகுதிக்குச் செல்வதற்கு முன், இதன் வளர்ச்சி நிலை அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று நாம் எண்ணினோம். ஹேநான் மாநிலத்தின் Zheng Zhou நகரத்திற்கு வந்து நேரில் கண்ட பின், இது மிகவும் விரைவாக வளர்ந்து வருகின்றது என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்."
ஜெர்மன் Schwerin நகராட்சித் தலைவரான Norbert Claussen அடிக்கடி Zheng Zhou நகரத்திற்கு வந்த போதிலும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமான இந்நகரிலான மாற்றங்கள், அவர் மனதில் ஆழப் பதிந்துள்ளன.
1 2
|