"நான் மூன்றாவது முறையாக Zheng Zhou நகரத்திற்கு வந்தேன். சீன மத்தியப் பகுதி, மிகவும் விரைவாக வளர்ந்துள்ளது. இதனால் நான் வியப்பு அடைகின்றேன்."
பிற பிரதேசங்களை விட, சீன மத்தியப் பகுதி, சில துறைகளில் அதிக மேம்பாடு உடையது என்பது உண்மைதான். இங்குள்ள உழைப்பு ஆற்றலுக்கான செலவு, கிழக்குப் பகுதிச் செலவில் சுமார் 60 விழுக்காடாகவே இருக்கிறது. அத்துடன், பெருமளவிலான, தரமான உழைப்பு ஆற்றல் உடையோரைக் கொண்டுள்ளது. தொழிற் துறையில் பயன்படுத்தக் கூடிய நிலங்கள், கிழக்குப் பகுதியில் இருப்பதை விட இங்கு 1.4 மடங்கு அதிகமாகும். அதனால், பல அந்நிய முதலீட்டு வணிகர்கள், தமது கவனத்தை இதன் மீது செலுத்தினர்.
ஜெர்மன் Metro குழுமம், உலகின் மிகப் பெரிய சில்லறை விற்பனைத் தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். பன்னாட்டுச் சில்லறை விற்பனைக் குழுமத்தைப் பொறுத்த வரை, சீன மத்தியப் பகுதியின் விளை பொருட்கள் மலிவாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன. இது, தொழில் நிறுவனங்களின் சந்தைப் போட்டியாற்றலை உயர்த்துவதற்குத் துணை புரியும் என்று Metro குழுமத்தின் சீன உறவுக்கான தொடர்புத் துறையின் பொது மேலாளர் Huang Zhongjie கூறினார்.
"மத்தியப் பகுதியில், குறிப்பாக, ஹேநான், ஹூநான், போன்ற பெரிய வேளாண் மாநிலங்களில், அதிகமான வேளாண் பொருட்களின் மூலவளங்கள், புத்தம் புதிய உணவுப் பொருட்கள் ஆகியவை உள்ளன. இறைச்சி வகை, பழங்கள், காய்கறிகள் முதலிய துறைகளில் வினியோகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுடன் ஒத்துழைத்து, உணவுப் பொருள் பதனீட்டுத் தொடரமைப்பைக் கூட்டாக வளர்ப்பதற்காக, இம்முறை பெரும் கொள்வனவுக் குழுவை நாம் அனுப்பினோம்." என்றார் அவர்.
1 2
|