• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-18 12:49:13    
சீனாவில் பணி புரியும் அந்நிய நிபுணர்கள்

cri

கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு அளவு உயர்ந்து வருவதோடு, அந்நிய திறமைசாலிகளுக்கான சீனாவின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தற்போது, சீனாவின் பல்வேறு துறைகளில் ஈடுபட்ட அந்நிய நிபுணர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கு அவர்கள் நல்ல பங்காற்றி வருகின்றனர். அத்துடன், சீனாவின் தொடர்புடைய துறைகளும் அவர்களுக்கு முழுமையான சேவைகளை வழங்கி, மனநிறைவு தரும் வாழ்க்கை மற்றும் பணிச் சூழலை உருவாக்கி வருகின்றன.

அபாஸ் ஜவாட் கடைமி என்பவர் ஈராக்கிலிருந்து வருகிறார். செய்தி ஊடகம் ஒன்றில் வேலை செய்யும் அவர், அரபு மொழிபெயர்ப்புக்கு வழிகாட்டுவதற்குப் பொறுப்பேற்கிறார். சீனாவில், 8 ஆண்டுகளாக வாழ்ந்துள்ள அவர், பெய்ஜிங் மீது ஆழ்ந்த உணர்வு கொண்டிருக்கிறார். சீனாவையும் பெய்ஜிங்கையும் தாம் விரும்புவதால், குடும்பத்தினர்களை சீனாவுக்கு கொண்டு வந்துள்ளதாக அவர் கூறினார்.

"எனது குடும்பத்தினர் பெய்ஜிங்கில் வாழ்வதில் மகிழ்ச்சி அடைகின்றனர். எனது குழந்தைகள் இங்குள்ள பள்ளியில் மகிழ்ச்சியுடன் படிக்கின்றனர். நானும் எனது சக பணியாளர்களுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். சீனாவையும் பெய்ஜிங்கையும் எமது 2வது ஊராகக் கருதியுள்ளோம்" என்றார் அவர்.

அபாஸ் போன்ற அந்நிய நிபுணர்கள், தற்போது சீனாவில் 2 லட்சத்துக்கும் மேலாக உள்ளனர். வேளாண்மை, தொழில் துறை, நாணயம், தகவல் தொழில் நுட்பம், கல்வி, ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபடுகின்றனர்.

பணிக்குத் தேவை, சீன மொழி மீதான ஆர்வம், சீனப் பண்பாடு மீதான ஆர்வம் மற்றும் ஈடுபாடு முதலியவை அவர்கள் சீனாவுக்கு வந்ததற்கான காரணங்களாகும். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்களின் கண்களில், சீனா, வளர்ச்சி வாய்ப்புகள் நிறைந்து காணப்படும் ஓர் இடமாகும். கடந்த கோடைக்காலத்தில் பிரிட்டனிலிருந்து சீனாவுக்கு வந்த Paul Dixon கூறியதாவது—

"சீனாவின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் பெரியதாகி வருகிறது. பிரிட்டனில் இருந்த போது, சீனாவின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என எங்களுக்கு அடிக்கடி அறிவுரை புகட்டப்பட்டுள்ளது. ஏனென்றால், 21ஆம் நூற்றாண்டு, சீனாவுக்குரிய நூற்றாண்டாகும். சீனாவில் வாய்ப்புகள் அதிகம் என்பது தான் காரணம். வணிகம் செய்வது, சுற்றுப் பயணம் மேற்கொள்வது, கல்வி பயில்வது ஆகியவற்றுக்காக, ஒவ்வொரு ஆண்டும் அவ்வளவு அதிகமான அந்நியர்கள் சீனாவுக்கு வருகின்றனர். சீனாவுக்கு வருவதில் மக்களின் மனதில் உற்சாகம் நிறைந்து காணப்படுகிறது" என்றார் அவர்.

திரு Dixon தற்போது பொது தொடர்பு நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறார். சீனாவிலுள்ள வேலை மற்றும் வாழ்க்கையை செவ்வனே ஏற்றுக் கொள்ளவென, சீனாவுக்கு வந்ததும் பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்து சீன மொழியைக் கற்றுக் கொள்ளத் துவங்கியதாக அவர் எமது செய்தியாளிடம் கூறினார். சீனாவின் பல்கலைக்கழகங்களில் ஏறக்குறைய அனைவரும் ஆங்கிலத்தில் பேச முடியும். இது அவருக்கு பெரும் வியப்பு தருகிறது. பரிச்சயம் இல்லாத இடத்தைப் பழகிக்கொள்ள, எவருக்கும் நேரம் தேவை என்று அவர் கருதுகிறார். ஆனால், சீனாவுக்கு வந்த அவர், சூழலுக்கு ஏற்ப தன்னை பழகிக் கொள்ளத் தேவைப்பட்ட நேரம் அவரது எதிர்பார்ப்பை விட குறைவு. தற்போது சீனாவிலுள்ள வாழ்க்கைக்கு அவர் முற்றிலும் பழகிக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த Mitchell Cooper பெய்ஜிங் அறிவியல் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி ஆசிரியராக வேலை செய்கிறார். தனது பணி மீது அவர் உற்சாகம் கொண்டிருக்கிறார். 

1 2