• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-18 12:49:13    
சீனாவில் பணி புரியும் அந்நிய நிபுணர்கள்

cri

"இந்த வேலை பற்றி நான் மனநிறைவு அடைகின்றேன். இங்குள்ள பல்கலைக்கழகத்தில் பாடம் கற்றுக் கொடுப்பதை நான் விரும்புகின்றேன். வகுப்பில் இருந்த போது நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். நாம் அடிக்கடி நன்றாக மனம் விட்டு சிரித்து மகிழ்கிறோம்" என்றார் அவர்.

வெளிநாட்டு நிபுணர்களை வென்சியாபாவ் சந்தித்துரையாடிய போது

தமது வேலையை திரு Cooper மிகவும் விரும்புகிறார் என்பது தெரிவு. சீனாவுக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. சீனாவில் நிரந்தரமாக தங்கி மாணவர்களுடன் இணைந்து வாழ விரும்புவதாக அவர் செய்தியாளரிடம் கூறினார். சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, ஒரு புறம், அவர்களுக்கு மேலும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. மறு புறம், சீனாவின் நிறுவனங்களை அவர்களுக்கு மனநிறைவு தரும் வசதிகள் வழங்கச் செய்துள்ளது. தற்போது சீனாவின் பெரிய தொழில் நிறுவனங்கள், உயர் கல்வி நிலையங்கள் மற்றும் இதர முக்கிய பணித்தலங்கள் சிலவற்றில் வழங்கப்பட்டுள்ள ஊதியமும் பிற வசதிகளும் வெளிநாடுகளை விட அதிகமானவை என்றும் அவர் கூறினார்.

அந்நிய நிபுணர்களுக்கான சேவையை சீனா முழுமையாக்கி வருவது என்பதும், சீனாவுக்கு வர அவர்களை ஈர்க்கும் காரணமாகும். அந்நிய நிபுணர்கள் சீனாவில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு வசதி வழங்க, ஒவ்வொரு ஆண்டும் சர்தவதேசத் திறமைசாலிகளை வேலைக்கு அமர்த்தும் கூட்டத்தையும் சர்வதேசத் திறமைசாலி பரிமாற்ற மாநாட்டையும் சீன அரசின் அந்நிய நிபுணர்களுக்கான பணியகம் நடத்துகிறது. அன்றாட வாழ்க்கையில் அந்நிய நிபுணர்களுக்கு தனித்தன்மை வாய்ந்த சேவை உள்ளிட்ட பல்வகை வசதிகளை வழங்க இந்தப் பணியகம் பாடுபட்டு வருகிறது.

சர்வதேசத் திறமைசாலிகளை வேலைக்கு அமர்த்தும் கூட்டம்

சீனாவின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ள அந்நிய நிபுணர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அந்நிய நிபுணர்களைப் பாராட்டும் மாநாட்டை சீன அரசு 1950ஆம் ஆண்டுகளிலே நடத்தத் தொடங்கியது. குறிப்பாக, 1990ஆம் ஆண்டுகள் முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த 50 அந்நிய நிபுணர்களுக்கு "சீன மக்கள் குடியரசு நட்புறவு விருது" வழங்கப்படுகிறது. அந்நிய நிபுணர்களைப் பொறுத்த வரை, இந்த விருது, மிக உன்னதமான பெருமை ஆக பொருட்படுகிறது என்று மேற்கூறிய நிபுணர் அபாஸ் கூறினார்.

"என் நண்பர் ஒருவர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார். இதைப் பெறுவதை நானும் எதிர்பார்க்கின்றேன். ஏனென்றால், இதைப் பெற்றவர்களைப் பொறுத்த வரை, இது ஈடிணையற்ற பெருமை என்று கூறலாம். இத்தகைய விருதைப் பெற நான் பாடுபட்டு வருகின்றேன். என்னைப் பொறுத்த வரை இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, இந்த விருது, சீன அரசு மற்றும் சீன மக்களால் வழங்கப்படும் விருது ஆகும்" என்றார் அவர்.

தற்போது, அந்நிய நிபுணர்களை உட்புகுத்தும் நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து முழுமையாக்கி வருகிறது. அவர்களுக்கு சேவை புரியும் நிலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும், சீனாவுக்கு வந்த அந்நிய நிபுணர்களுக்கு சீரான வேலை மற்றும் வாழ்க்கை வசதிகளை வழங்கவும் சீனா பாடுபட்டு வருகிறது.


1 2