• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-19 14:48:03    
உலகின் புதிய 7 அதிசயங்கள்

cri

உலகின் புதிய 7 அதிசயங்கள் தொடர்பான வாக்கெடுப்பு முடிவு, ஜீலை 7ஆம் நாளன்று போர்த்துகல் தலைநகரான லிஸ்பனில் அறிவிக்கப் பட்டுள்ளது. சீனாவின் பெருஞ்சுவர், அதிக வாக்குகள் பெற்று, புதிய 7 அதிசயங்களில் முதலிடம் பிடித்துள்ளது.

பெருஞ்சுவர் தவிர, ஜோர்டான் நாட்டின் பேட்ரா பண்டைய நகரம்、பிரேசிலின் ரியோடி ஜெனெரோவிலுள்ள கிறிஸ்து சிலை、 பெரு நாட்டின் மச்சு பிச்சுவிலுள்ள இன்கா நகரச்சிதிலம்、இத்தாலியின் ரோம் நகரிலுள்ள கொலாசியம் என்னும் விளையாட்டரங்கம்、மெக்சிகோ நாட்டின் மாயா மக்களின் நகரமான சிச்சன் இட்சா、இந்தியாவின் தாஜ்மஹால் ஆகியனவும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

உலகளவில் சுமார் 9 கோடி மக்கள், இணைய தளம்、தொலைபேசி、குறுந் தகவல் ஆகிய வழிமுறைகள் மூலம் வாக்களித்தனர். இவ்வாக்கெடுப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்த"புதிய 7 அதிசயங்களுக்கான நிதியம்", தொடர்புடைய நாடுகளின் பிரதிநிதிகளுக்குச் சான்றிதழையும் நினைவுப்பதக்கத்தையும் வழங்கியுள்ளது. இந்நடவடிக்கைக்கான நினைவு விழாவில் பங்கேற்ற சீனப் பெருஞ்சுவர் கழகத்தின் பிரதிநிதி HAN GUO WEI செய்தியாளரிடம் பேசுகையில், "பெருஞ்சுவரானது, முழு மனித குலத்துக்குரிய உலகப் பண்பாட்டு மரபுச் செல்வம். அதன் மாபெரும் வசீகர ஆற்றலால் உலகின் புதிய 7 அதிசயங்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

சீனத் திரைப்படங்களின்

நுழைவுச்சீட்டு வருமானம்

சீனாவின் திரைப்படத் தொழில், விரைவாக வளர்ந்து வருகின்றது. சீனாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் நுழைவுச்சீட்டு வருமானம் அடுத்தடுத்து 4 ஆண்டுகளாக இறக்குமதித் திரைப் படங்களைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு அது 55 விழுக்காட்டை வகித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் 330 நீள் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், 13 கார்ட்டூன் திரைப்படங்களும் 13 ஆவணத் திரைப்படங்களும் 36 அறிவியல் கல்வி சார் திரைப்படங்களும் 7 சிறப்புத் திரைப் படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டுத் திரைப்படங்களின் நுழைவுச்சீட்டு வருமானம், 262 கோடி யுவானை எட்டியுள்ளது. திரைப்படத் துறையின் ஒட்டுமொத்த வருமானம், 573 கோடி யுவானாகும். இவை இரண்டும், வரலாற்றில் மிக அதிகமானவை.

அண்மையில் பெய்ஜி்ங்கில் வெளிவந்த, " 2007ஆம் ஆண்டுக்கான சீனச் செய்தி ஊடகத் தொழிலின் வளர்ச்சி பற்றிய அறிக்கை ", இத்தகவலைத் தந்துள்ளது.


1 2