• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-19 14:48:03    
உலகின் புதிய 7 அதிசயங்கள்

cri

உலகம் சுற்றும் அமெரிக்க வாலிபன்

அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பரிந்தன் ஒவன், கடந்த ஜுன் 27ஆம் நாள், உலகம் சுற்றும் பயணத்தை முடித்துக் கொண்டு, ஃபிளோரிடா மாநிலத்தின் மியாமி விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரை இறங்கினார்.

இவ்வாண்டு மார்ச் 23ஆம் நாள் அவர் விமானத்தை ஓட்டி மியாமியிலிருந்து புறப்பட்டு, கனடா, அத்லாந்திக் பெருங்கடல், ஐரோப்பா ஆகியவற்றைக் கடந்து சென்றார். பின்னர், மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பிற பிரதேசங்கள் வழியாக நாடு திரும்பினார். அவரது முழுப் பயணத் தூரம், 33800 கிலோமீட்டர்.

தன்னந்தனியாக விமானத்தை ஓட்டி உலகத்தைச் சுற்றிப் பயணம் மேற்கொண்ட மிக இளையவர் என்ற பெருமை, அவரையே சாரும்.

நாட்டின் அதிபர் யார் என்று தெரியாத

கனேடிய நாட்டவர்

பெரும்பான்மையான கனேடிய மக்கள் தங்கள் நாடு பற்றிய பொது அறிவு தேர்வில் தேறவில்லை என்று கனடாவின் ஈரே கருத்துக் கணிப்பு நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வு காட்டியுள்ளது.

இப்பொது அறிவு தேர்வானது, கனடாவின் வரலாறு, அரசியல், பண்பாடு, புவியியல் ஆகியவை பற்றியது.

கள ஆய்வுக்குட்படுத்தப் பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் தேர்வில் தேறவில்லை. வாக்காளருக்கு இன்றியமையாத 3 தகுதிகள் எவை என்ற வினாவுக்கு 4 விழுக்காட்டினர் மட்டும் சரியாக விடையளித்தனர். கனடாவின் மாநிலங்களின் எண்ணிக்கை, அவற்றின் நிலப்பரப்பு ஆகியவை பற்றி 3 விழுக்காட்டினர் மட்டும் பிழையின்றி பதிலளித்தனர். ராணி 2வது எலிசபெத், நாட்டின் அதிபர் என்பது 8 விழுக்காட்டினருக்கு மட்டுமே தெரியும் என அறிவிக்கப் பட்டது.


1 2