இந்த முதலீட்டு வர்த்தக பொருட்காட்சியின் போது நடைபெற்ற பன்னாட்டுக் குழுமங்களின் கொள்வனவுப் பேச்சுவார்த்தையில், 85 கோடி யுவான் மதிப்புள்ள உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிய வருகிறது. அழைப்பின் பேரில் இப்பேச்சுவார்த்தையில், கலந்து கொண்ட சீன அந்நிய வணிகர்கள், சாதனத் தயாரிப்பு, நிலக்கரி வேதியியல தொழிற்துறை, அலுமினியத் தொழிற்துறை, உந்து வண்டி உதிரி பாகங்கள், எரியாற்றல், மூலப் பொருட்கள், வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புத் தொழில் பதனீடு, சுற்றுலாத் துறை முதலியன பற்றி வெளியிட்ட வணிகத் திட்டப்பணிகளின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் திங்களில், மத்தியப் பகுதியின் வளர்ச்சி என்ற திட்டம், சீனாவின் தேசிய நெடுநோக்கு திட்டம் என்ற முறையில், அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனுடன், மத்தியப் பகுதி கிளர்ந்தெழுதல், மேற்குப் பகுதியின் பெரும் வளர்ச்சி, வடகிழக்குப் பகுதியை விறுவிறுப்பாக வளர்த்தல், கிழக்குப் பகுதியின் வளர்ச்சியை விரைவுபடுத்தல் ஆகியன, சீனாவின் முழுமையான தேசிய மண்டலப் பொருளாதார வளர்ச்சி நெடுநோக்குத் திட்டத்தைக் கூட்டாக உருவாக்கியுள்ளன. தேசிய நெடுநோக்குத் திட்டத்தை நடைமுறைபடுத்துவது என்பது, மத்திய பிரதேச வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்பாகும். என்று இந்தோனேசிய கழுகு விமானப் பயணச் சேவை நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேலாளர் XINGQIANG கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது.
1 2
|