தற்போது, பெய்ஜிங் சாங்கை, GUANGZHOU ஆகிய இடங்களில் சந்தைகளைத் திறந்து வைக்கிறோம். கிழக்குப் பகுதிப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. என்பது பற்றி, நமக்குத் தெரியும். தேசிய நெடுநோக்குத் திட்டம், மத்தியப் பகுதிக்கும் மேற்குப் பகுதிக்கும் படிப்படியாகத் திசை திரும்பியுள்ளது. வெளிநாட்டு விமானப்பயணச் சேவை கூட்டு நிறுவனமான நாங்களும் மத்தியப் பகுதி, மேற்குப் பகுதி ஆகியவற்றில் மேலும் அதிகமான பயணிகளைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். இந்தச் சந்தையில் மிகுந்த கவனம் செலுத்துகின்றோம் என்று கூறினார். மத்திய பிரதேசத்தில் பேரார்வம் கொள்வதாகத் தெரிவித்த அதே வேளையில், திரு XINGQIANG நல்ல கருத்துக்களையும் முன்வைத்தார்.
சுற்றுலா பற்றிய உள்ளுர் கருத்து, சேவைக் கருத்து ஆகியவற்றை பெரிதும் மேம்படுத்த வேண்டும் என கருதுகின்றேன். எட்டுத்துக்காட்டாக, வெளிநாட்டு மக்கள் ஆயினும், பிற பிரதேச மக்கள் ஆயினும் அனைவரும் வசதியை அனுபவிக்கத் துணை புரிய வேண்டும். வெளிநாட்டு நண்பர்கள் அன்பும் மகிழ்ச்சியும் பெறும் போது, மனநிம்மதியுடன் ஒத்துழைப்பு வாய்ப்பை நாடுவர், உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இது மிக முக்கியமானது என்றார் திரு XINGQIANG.
தனிச்சிறப்பு வாய்ந்த புவியியல் அமைவிடம், வசதியான போக்குவரத்து நிலைமை, சிறந்த முதலீட்டுச் சூழல், செழிப்பான இயற்கை மூலவளம் ஆகியவற்றைக் கொண்ட மத்திய பகுதிச் சந்தை, மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் வாய்ந்தது. எதிர்காலத்தில், அந்நிய வணிகர்கள் சீனாவின் மத்தியப் பிரதேசத்தில் முன்னெப்போதும் கண்டிராத வாய்ப்பை எதிர்நோக்குவர் என்று சீனாவின் வணிகத் துறை அமைச்சர் BOXILAI மத்திய சீனாவின் இரண்டாம் முதலீட்டு வர்த்தக பொருட்காட்சியில் தெரிவித்தார். 1 2
|