• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-23 19:56:42    
சளித்தொல்லையும், விட்டமின் "சி"யும்

cri

மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இந்த விட்டமின் சியை மாத்திரைகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒன்றேல் சளியை வராமல் தடுக்க அல்லது சளி வந்தாலும், அதன் அறிகுறிகளின் தீவிரத்தை தணிவுபடுத்த.

ஆனால் இத்தகைய மாத்திரைகள், சளியைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அதன் தீவிரத்தை தணிவுபடுத்துவதுமில்லை என்று அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாரத்தான் எனப்படும் நெடுந்தூர ஓட்டத்தில் பங்கேற்போர், ஸ்கீயிங் என்பபடும் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்போர், மிகத்தீவிரமான சளியால் துன்புறுவோர், மன அழுத்தத்தால் அவதியுறுவோர், இவர்களுக்கு மட்டும்தான் இந்த விட்டமின் சி மாத்திரைகள் கொஞ்சம் பயன் தருகின்றன. மற்றவர்கள் சளி வந்தால், இந்த விட்டமின் சி மாத்திரைகளை சாப்பிட மெனக்கெட வேண்டாம் என்று கூறுகின்றனர்.

ஈந்த ஆய்வாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் 11 ஆயிரம் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இவர்கள் கூறுவது என்னவென்றால், 365 நாட்களும் விட்டமின் சியை சாப்பிடுவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை என்பதுதான்.

கோக்ரேன் லெபாரட்டரி என்ற மருத்துவ ஏட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு பொதுவாக விட்டமின் சியை வழமையாக அன்றாடம் உட்கொள்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சளி ஏற்பட குறைவான வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்தது. மேலும் அன்றாடம் விட்டமின் சியை உட்கொள்பவர்களுக்கு சளி பிடித்தால் அதன் தீவிரம் எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதும் ஆராயப்பட்டது. பொதுவாக கடைகளில் கிடைக்கும் விட்டமின் சி மாத்திரைகளில் இருப்பதைப்போல் 4 மடங்கு அதாவது 2 கிராம் விட்டமின் சியை ஆய்வுக்குட்படுத்தப்பட்டோர் உட்கொண்டனர். ஆய்வின் முடிவில், உலகின் பல்வேறு பகுதியிலிருந்தான தரவுகளின்படி, விட்டமின் சி மாத்திரைகள் மிகக் குறைவான பயனையே தந்தனவாம். அன்றாடம் விட்டமின் சியை உட்கொண்டவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 2 விழுக்காடு மட்டுமே குறைவாக சளிபிடிக்கும் ஆபத்தில்லாதிருந்தனர். சளியின் தீவிரமும் மிகச் சிறிய அளவே குறைந்தது. பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகம் இவற்றைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்களின் கருத்தில், இந்த் ஆய்வை சுருங்கச் சொன்னால், மற்றவர்கள் ஆண்டில் 12 நாட்கள் சளியால் அவதியுற்றால், அன்ராடம் விட்டமின் சி சாப்பிடுபோர் ஆண்டில் 11 நாட்கள் அவதியுறுவர்.

ஆண்டுக்கு 3 அலது 4 முறை நமக்கு சளி பிடிக்கிறது. சளி பிடித்தால், தலைவலி, மூக்கடைப்பு, தொண்டை வலி, காய்ச்சல், இருமல், முக்கொழுகுதல் என அதன் சகாக்களும் சேர்ந்து நம்மை உண்டு இல்லையென ஆக்கிவிடுகின்றன.

1 2 3