• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-23 19:56:42    
சளித்தொல்லையும், விட்டமின் "சி"யும்

cri

கிண்டலாக இதையும் சொல்லக் கேட்டிருப்போம், நமக்கெல்லாம் சளிபிடித்தால் எப்படி அவதியுறுகிறோம், பத்து தலை ராவணன் எப்படி சமாளித்திருப்பார் என்று. கேலியும், கிண்டலும் ஒருபுறம் இருக்கட்டும். நம்மில் அனைவருமே அறிந்தது, அனுபவத்தால் உணர்ந்தது, இந்த சளித்தொல்லை. நாம் பலரும் நம்பிய விட்டமின் சியும் இபோது பயனற்றதாக அறிவியலர்கள் கூறியதால் கவலை ஏற்படுகிறது அல்லவா. கவலையை விடுங்கள், கொஞ்சம் ஆறுதலான தகவலும் உண்டு.

விட்டமின் சி பொதுவாக அனைவருக்குமே பலன் தராது என்றாலும், இச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு அது பலன் தரும் என்பதை பிரித்தானிய வல்லுனர்கள், கண்டறிந்துள்ளனர். அபெர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த நுண் உயிரியலாளர் ஹியூக் பென்னிங்க்டன் என்பவர், சளிக்கு விட்டமின் சி மாத்திரைகளும், ஆரன்ச்ஜு வழச்சாறும் பெரிதாக ஒன்றும் பயன் தரவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன ஆனால் அவற்றை உட்கொள்வதால் கேடொன்றுமில்லை, தீங்கொன்றுமில்லை என்கிறார். மட்டுமல்ல, இவற்றை சாப்பிடுவதால் குணமாகும், சளி குறையும் என்ற நம்பிக்கையே சளியால் அவதியுறுபவர்களுக்கு ஆறுதலாக இருக்கும், அவர்கள் ஓரளவு தெம்பைப் பெறுவார்கள் என்கிறார் பென்னிங்க்டன்.

மறுபுறத்தில் எக்கினாசியா என்ற ஒரு தாவரத்தின் மூலமான மருந்து சளிக்கு நல்ல பயனுள்ள நிவாரணமளிப்பதாக அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர். சூரியகாந்தி பூவைப்போல காட்சியளிக்கும் இந்த எக்கினாசியா பூக்களின் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, கிட்டத்தட்ட சலிபிடிக்கும் வாய்ப்பை பாதியளவு குறைக்கிறதாம். என்ன் எக்கினாசியா எங்கே கிடைக்கும் என்பதுதானே உங்கள் கேள்வி....??


1 2 3