• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-25 17:23:13    
ஹாங்காங் உணவுச் சந்தைக்கு சீனப் பெருநிலப்பகுதி வழங்கிய உத்தரவாதம்

cri

ஹாங்காங் உணவுச் சந்தைக்கான காய்கறிகள்

நீண்டகாலத்தில், ஹாங்காங் சந்தையில் விற்கப்படும் வீட்டுப் பறவை, இறைச்சி, முட்டை முதலிய உணவுப் பொருட்கள், முக்கியமாக சீனப் பெருநிலப்பகுதியின் வினியோகத்திலிருந்து வருகின்றன. ஹாங்காங் மீதான இறையாண்மையை சீன அரசு மீண்டும் பயன்படுத்திய பின், ஹாங்காங்கிற்கு சீனப் பெருநிலப்பகுதி வினியோக்கித்த வீட்டுப் பறவை, இறைச்சி, முட்டை ஆகிய உணவுப் பொருட்கள் அதிகரித்து வருகின்றன. சீனப் பெருநிலப்பகுதியிலிருந்து வந்த செழிப்பான உற்பத்திப் பொருட்களை ஹாங்காங் நகரவாசிகள் அனுபவிக்கச் செய்வது மட்டுமின்றி, சீனப் பெருநிலப்பகுதியைச் சேர்ந்த உற்பத்தி வணிகர்கள் மற்றும் விற்பனை வணிகர்களுக்கு இது வாய்ப்புகளையும் தந்துள்ளது.

ஹாங்காங்கின் Tigermart பேரங்காடியில், பல்வகை வணிகப் பொருட்கள் வசிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நகரவாசி சென் யான் லிங் அம்மையார் உணவுப் பொருட்களைத் தெரிவு செய்துக் கொண்டிருந்தார். செய்தியாளரிடம் அவர் கூறியதாவது—

ஹாங்காங் உணவுச் சந்தைக்கான காய்கறிகள்

"இங்கே சீனப் பெருநிலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அதிகம். இந்த உணவுப் பொருட்களை உண்ண விரும்புகின்றோம். இந்தப் பொருட்களின் விலை மலிவு" என்றார் அவர்.

மிகப்புதியது, விலை மலிவு ஆகியவை, சீனப் பெருநிலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மிகப் பெரிய மேம்பாடுகளாகும். Tigermart பேரங்காடியில் மூன்றில் ஒரு பகுதி சரக்குகள் சீனப் பெருநிலப்பகுதியிலிருந்து வருகின்றன என்று இப்பேரங்காடியில் விற்பனை பிரச்சாரப் பணியாளர் குவான் யோங் யே செய்தியாளரிடம் கூறினார்.

1962ஆம் ஆண்டில், ஹாங்காங் பிரதேசத்துக்கு உயிருள்ள வீட்டுப் பறவைகள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் சிறப்பு அதிவிரைவுத் தொடர் வண்டியை சீனப் பெருநிலப்பகுதி துவக்கி வைத்தது. உயிருள்ள உற்பத்திப் பொருட்களுக்கான ஹாங்காங் நகரவாசிகளின் தேவையை இது உத்தரவாதம் செய்துள்ளது. 1997ஆம் ஆண்டில் ஹாங்காங் மீதான இறையாண்மையை சீன அரசு மீண்டும் பயன்படுத்திய பின், ஹாங்காங்கிற்கு சீனப் பெருநிலப்பகுதி வழங்கிய உயிருள்ள உற்பத்திப் பொருட்களின் அளவு, வகை மற்றும் தரம் பெருமளவில் உயர்ந்துள்ளன.

1 2