• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-25 17:23:13    
ஹாங்காங் உணவுச் சந்தைக்கு சீனப் பெருநிலப்பகுதி வழங்கிய உத்தரவாதம்

cri

சியௌ சுவான் நிறுவனம், ஹோபெய் மாநிலத்தில் ஹாங்காங்கிற்கு மாடுகளை வினியோகிக்கும் மிகப் பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றாகும். ஹாங்காங்கிற்கு மாடுகளை வினியோகிக்கும் தளமாக இந்த நிறுவனம் 2000ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் மேலாளர் லீ வெய் அம்மையார் செய்தியாளரிடம் கூறியதாவது—

 "ஹாங்காங்கிற்கான மாடுகளின் தரத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், தொழிலாளர் அனைவருக்கும் நாம் அடிக்கடி பயிற்சி அளிக்கின்றோம். அவர்களுக்கு வளர்ப்பு பற்றிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கின்றோம். மாடுகளை வளர்ப்பதில் அவர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளனர்" என்றார் அவர்.

சீனப் பெருநிலப்பகுதியின் போக்குவரத்து வளர்ச்சியுடன், ஹாங்காங்கை ஒட்டியமையும் ச்சு ஜியாங் கழிமுகம், ஏன் நாடு முழுவதிலும் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் அடிப்படையில் இணைந்துள்ளன. ஹாங்காங்கிற்கு அருகிலுள்ள மாநிலங்களும் நகரங்களும் சரக்குப் பெட்டக வாகனங்களின் மூலம் சரக்குகளை நேரடியாக ஹாங்காங்கிற்கு ஏற்றிச் செல்லலாம். இந்த முறை, செலவைச் சிக்கனப்படுத்துவது மட்டுமன்றி, வசதியாகவும் விரைவாகவும் உள்ளது. Tigermart பேரங்காடியில் விற்பனை பிரச்சாரப் பணியாளர் குவான் யோங் யே கூறியதாவது—
"தற்போது சீனப் பெருநிலப்பகுதியிருந்து வந்த உணவுப் பொருட்களில், முட்டை, noodle, biscuit, பானங்கள் முதலியவை அடங்கும். அவற்றின் விலை உரிய நிலையில் உள்ளது" என்றார் அவர்.

சீன வணிக அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த சில ஆண்டுகளில், ஹாங்காங் சந்தையில் உயிருள்ள 80 விழுக்காடு பன்றிகளும் 50 விழுக்காடு கோழிகளும் சீனப் பெருநிலப்பகுதியிருந்து வருகின்றன. அத்துடன், ஹாங்காங்கிற்கு சீனப் பெருநிலப்பகுதி வினியோக்கிக்கும் உணவுப் பொருட்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சீனப் பெருநிலப்பகுதியும் ஹாங்காங்கும் தொடர்ந்து புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் முதல் ஹாங்காங் மற்றும் மகௌவுக்கு வினியோகிக்கப்படும் காய்கறிகளின் விளைச்சலிடத்திலான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டை, சீனத் தேசிய தரக் கட்டுப்பாடு மற்றும் பரிசோதனை தலைமை பணியகம் வலுப்படுத்துவது முதலியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். இந்த நடவடிக்கைகளின் வெளியீடு, வலிமைமிக்க உத்தரவாதம் வழங்குகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


1 2