• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-01 11:58:58    
பெய்சிங் மாநகராட்சி அரசின் தைவான் விவகார அலுவலகம்

cri

இரு கரை இளைஞர்களுக்கிடையிலான பரிமாற்றம் 

தைவான் நீரிணையின் இரு கரைகளுக்கிடை உறவின் வளர்ச்சியுடன், பெய்சிங், தைவான் ஆகிய இரு இடங்களுக்கிடையே அரசு சாரா பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெருநிலப்பகுதியின் வளர்ச்சி, அரசியல் நிலைமை, மக்களின் வாழ்க்கை ஆகியவற்றில் பெய்சிங்கில் உள்ள தைவான் உடன்பிறப்புகள் கவனம் செலுத்துகின்றனர். அவர்களில், சிலர், இங்கு முதலீடு செய்து, தொழில் நடத்துகின்றனர். சிலர், இங்கு கல்வி பயில்கின்றனர். சிலர், அறிவியல் ஆய்வு மற்றும் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலர் பெய்சிங்கில் வீடு வாங்கியுள்ளனர். இங்கு நீண்டகாலமாக வாழ ஆயத்தம் செய்கின்றனர். எதற்காக பெய்சிங்கில் தங்கியிருந்த போதிலும், பெய்சிங் மாநகராட்சி அரசின் தைவான் விவகார அலுவலகம், தைவான் உடன்பிறப்புகளுக்குச் சேவை புரியப் பாடுபடுகின்றது. இவ்வலுவலகத்தின் பணியாளர்கள், அவர்களின் நம்பகமான நண்பர்களாக மாறியுள்ளனர்.

பெய்சிங்கில் உள்ள தைவான் உடன்பிறப்புகளைப் பொறுத்த வரை, 84080428 என்னும் நேரடி தொலைபேசி தொடர்பு மிகப் பிரபலம். தைவான் உடன்பிறப்புகளுக்கு சேவை புரியும் பொருட்டு, 2003ஆம் ஆண்டு இச்சேவை துவங்கப்பட்டது. இதற்குப் பின், முதலீடு, சமமான அணுகு முறை, சமூகக் காப்பீடு, உடல் பரிசோதனை ஆகியவற்றில், தைவான் உடன்பிறப்புகள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களையும் பிரச்சினைகளையும் தீர்க்க இந்நேரடி தொலைபேசித் தொடர்பு உதவுகின்றது.

வியாபாரிகளுக்கிடையிலான பரிமாற்ற நடவடிக்கை

கடந்த சில ஆண்டுகளில், தைவான் உடன்பிறப்புகளுக்கு வசதி வழங்கும் பொருட்டு, நேரடி தொலைபேசித் தொடர்பு, பெய்சிங் மாநகராட்சி அரசின் தைவான் விவகார அலுவலகம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். பெய்சிங்கில் தைவான் உடன்பிறப்புகளுக்கான முதலீடு, வேலை, கல்வி, சுற்றுலா மற்றும் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் பொருட்டு, இவ்வலுவலகம் 16 விதமான நடவடிக்கைகளை வகுத்துள்ளது. தைவான் உடன்பிறப்புகள், பயனுள்ள, தரமிக்கச் சேவையை அனுபவிப்பதற்கு இவை உத்தரவாதம் அளிக்கின்றன.

"தைவான் வணிகர்களுக்கான பெய்சிங் மாநகர் முதலீட்டுச் சேவை மையத்தையும்", "தைவான் வணிகர்களின் புகார் ஒருங்கிணைப்பு மையத்தையும்" தைவான் விவகார அலுவலகம் நிறுவியுள்ளது. பல்வகை வழிமுறைகளில், தைவான் வணிகர்களின் புகார்களைக் கையாண்டு, தைவான் தொடர்பான ஆலோசனைகளை வழங்குகின்றது. Zhou Heng Zhao என்பவர், தைவான் வணிகர் புகார் ஒருங்கிணைப்பு மையத்தின் அதிகாரி ஆவார். தைவான் உடன்பிறப்புகளின் நலனுடன் தொடர்புடைய பல்வகை புகார் வழக்குகளைக் கையாள்வது அவரின் பணியாகும்.

1 2