• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-01 11:58:58    
பெய்சிங் மாநகராட்சி அரசின் தைவான் விவகார அலுவலகம்

cri

2003ஆம் ஆண்டு, இம்மையம் நிறுவப்பட்டப் பின், ஆண்டுதோறும், சுமார் நூறு புகார் வழக்குகள் கையாளப்பட்டுள்ளன. பெய்சிங்கில், தைவான் வணிகர்களின் முதலீடு, வளர்ச்சி, வாழ்க்கை மற்றும் சுற்றுலாவுக்கு இது மிக முக்கிய பங்காற்றியுள்ளது என்று Zhou Heng Zhao கூறினார்.

பண்பாட்டு பரிமாற்றம்

தைவான் வணிகர்களின் புகார் ஒருங்கிணைப்பு மையம், தனக்கு அளித்த உதவி பற்றி, குறிப்பிடுகையில் தைவான் வணிகரான He Guang Qi என்பவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். 1993ஆம் ஆண்டு, அவர் பெய்சிங்கிற்கு வந்து, தொழில் நடத்தத் தொடங்கினார். 1997ஆம் ஆண்டு, தைவானில் பெரிதும் வரவேற்கப்பட்ட துரித உணவு தொழிலை அவர் உட்புகுத்தி, பெய்சிங்கில் Xia Bu Xia Bu தொடர் துரித உணவு கூட்டு நிறுவனத்தை நிறுவினார். 2005ஆம் ஆண்டு, அவரின் கூட்டு நிறுவனத்தில் வளர்ச்சி தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதால், அவர் தைவான் வணிகர்களின் புகார் ஒருங்கிணைப்பு மையத்துடன் இரு முறை தொடர்பு கொண்டார். இம்மையத்தின் உதவியுடன், இப்பிரச்சினையை தங்கு தடையின்றி தீர்த்தார்.

இம்மையத்தின் தலைவர்கள், தைவான் முதலீட்டு கூட்டு நிறுவனங்கள் மற்றும் தைவான் வணிகர்களுக்காக சேவை புரிந்து, நன்மை செய்கின்றனர் என்றும், பெருநிலப்பகுதியில் முதலீடு செய்வதில் தனது நம்பிக்கை மேலும் உறுதியாகியுள்ளது என்றும் He Guang Qi கூறினார். தைவான் விவகார அலுவலகப் பணியாளர்களின் சளையாத முயற்சியில், தாய்நாட்டின் முதலீட்டுச் சூழல் மேலும் மேம்படும். அறிவு சார் சொத்துரிமை மீதான பாதுகாப்பு மேலும் வலுப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது வரை, பெய்சிங் உள்ளிட்ட பல இடங்களில், 70க்கு அதிகமான கிளைகளை He Guang Qi திறந்து விட்டார். Hotpot எனப்படும் துரித உணவு, அவர் பெருநிலப்பகுதியில் வளர்க்கும் முக்கிய தொழிலாக மாறியுள்ளது. பெருநிலப்பகுதியின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், மாபெரும் சந்தை உள்ளார்ந்த ஆற்றல், தைவான் வணிகர்களுக்கு அரசு வழங்கும் பல சலுகைக் கொள்கள் ஆகியவை, "Xia Bu Xia Bu Hotpot" வெற்றி பெறுவதற்குக் காரணிகளாகும் என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:

பண்பாட்டு பரிமாற்றம்

"தைவான் வணிகர்களைப் பொறுத்த வரை, பெருநிலப்பகுதியின் முதலீட்டுச்சூழல் சிறந்தது. தைவான் வணிகர்களுக்கு வழங்கப்படும் சலுகைக் கொள்கைகள் அதிகம். சீனாவின் சந்தை மிகவும் பெரியது. கோடிக்கணக்கான மக்கள் உண்டு. உணவு துறைக்கு மிக பல நுகர்வோர்கள் தேவை. தற்போது, பெருநிலப்பகுதியில், பொருளாதாரத்தின் அசுரவேக வளர்ச்சி, அமைதியான அரசியல் நிலைமை ஆகியவை, வணிகர்கள் தாய்நாட்டுக்கு வந்து முதலீடு செய்வதை ஈர்க்கும் இன்றியமையாத காரணிகளாகும்" என்றார் அவர்.

தற்போது பெய்சிங்கில் "Xia Bu Xia Bu" போன்ற தைவான் முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, ஈராயிரத்தைத் தாண்டியுள்ளது. இத்தொழில் நிறுவனங்கள், வேளாண்மை, தயாரிப்பு, வீடு மற்றும் நில உடைமை, உணவு, சமூக சேவை, பண்பாடு, கல்வி உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடையவை. பெய்சிங் மாநகரின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதில், அவை ஒரு முக்கிய ஆற்றலாக மாறியுள்ளன.

தைவான் விவகார அலுவலகத்தின் பணியாளர் Zhou Heng Zhaoயின் கண்பார்வையில், எளிதான, பொதுவான பணிகளில், பணியாளர்கள் அனைவரின் பேரார்வம், முயற்சி, விவேகம் மற்றும் திறன் நிறைந்து காணப்படுகிறது. அவர் கூறியதாவது:
"ஏற்பாடு, நிர்வாகம், வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு, தைவான் விவகார அலுவலகத்தின் கடமைகளாகும். தற்போது, சில மூலவளங்களை ஒருங்கிணைத்து, அனைவரின் திறனையும் வெளிக்கொணர்த்து, தைவான் உடன்பிறப்புகளுக்கு சேவை புரிகின்றோம்" என்றார், அவர்.


1 2