• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-26 11:06:59    
சீனாவில், சூரிய ஒளி செல்லிடப் பேசி

cri
சீனாவில், சூரிய ஒளி செல்லிடப் பேசி

சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தால் இயங்கும் செல்லிடப் பேசியைச் சீனா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. பெய்ஜிங்கிலுள்ள HEN JI WEI YE என்னும் குழுமம் இச்செல்லிடப்பேசியைத் தயாரித்துள்ளது. அதன் மூடியின் மேல் பகுதியில் சூரிய ஒளி மின்கலத் தகடு ஒன்று பொருத்தப்படுகிறது. செல்லிடப்பேசியைச் சூரிய ஒளியில் ஒரு மணிநேரம் வைத்தால், தொடர்ச்சியாக 40 நிமிடம் பேசலாம்.

சூரிய ஒளியால் இயங்கும் செல்லிடப்பேசியைக் கண்டுபிடிப்பதில் இக்குழுமம் 12 தொழில்நுட்பக் காப்புரிமைகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

சீனாவில், செல்லிடப் பேசிகளின் எண்ண்க்கை 40 கோடியைத் தாண்டியுள்ளது. இச்செல்லிடப்பேகிகளுக்கு, 2 நாட்களுக்கு ஒரு முறை மின்னேற்றம் செய்தால், ஆண்டுக்கு 146 கோடி கிலோவாட் மின்ராரம் செலவிடப்படும். ஆகவே, சூரிய ஒளி செல்லிடப்பேசியின் பயன்பாட்டைப் பரவல் செய்தால், எரியாற்றலைச் சிக்கனப் படுத்துவதற்கு அது முக்கிய பங்காற்றும் என்று இக்குழுமத்தின் தலைவர் zhang zheng yu தெரிவித்தார்.

பிரிட்டனில் புதிய கல்வித் திட்டம்

பிரிட்டன் அரசு, ஜீலை 12 ஆம் நாள், மேல்நிலைப் பள்ளிக்கான புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாடத் திட்டத்தின் நடைமுறைப் பயன்பாட்டை வலுப்படுத்தி, ஆசிரியர்கள் வளைந்து கொடுக்கும் முறையில் பாடம் கற்பிக்கத் துணைபுரிவது, இப்புதிய கல்வித்திட்டத்தின் நோக்கமாகும்.

வரலாற்றுப் பாடம் பற்றிய புதிய கல்வித்திட்டத்தில், 2வது உலகப் போரில் அரும்பெரும் செயல் புரிந்த முன்னாள் பிரிட்டன் தலைமையமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில் உட்பட, வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற மாமனிதர்களின் பெயர்கள் பல, நீக்கப்பட்டுள்ளன.

சர்க்சிலுடன், காந்தியடிகள்、 ஸ்டாலின்、 மார்டின் லூதர் கிங்、ஹிட்லர் உள்ளிட்ட வரலாற்றுப் பிரமுகர்களும் புதிய கல்வித்திட்டத்தில் இடம் பெறவில்லை.

1 2