• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-26 11:06:59    
சீனாவில், சூரிய ஒளி செல்லிடப் பேசி

cri

இம்மாற்றத்தினால், பிரிட்டனில் ஒரே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்ச்சிலின் பேரனும்、 கன்சர்வேதிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நிகுலாஸ் சோம்ஸ், "இது நகைப்பிற்கிடமானது" என்று குறிப்பிட்டார்.

"2வது உலகப் போர் என்பது, கற்பிக்க வேண்டிய பாடமாகும். இந்த வரலாற்றுத் காலகட்டம் பற்றிப் பாடம் கற்றுத் தரும் போது, சர்ச்சில்、 றிட்லர் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியும் என்று யாரும் நம்ப மாட்டார்" என பிரிட்டனின் பள்ளித் துனற அமைச்சர் அடோனிசும் தெரிவித்தார்.

அத்லாந்திக் கடலைக் குறுக்கே

கடக்கும் நாணல் கப்பல்

ஜெர்மனியைச் சேர்ந்த கடல் பயண வல்லுநர் டொமினிக் கிறிட்ஸ் என்பவர், ஜூலை 11 ஆம் நாள் நாணல் புல்லாலான கப்பல் ஒன்றைச் செலுத்தி, அமெரிக்க நியூயார்க்கின் மன்ஹாடன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, 2 திங்கள் காலத்தில் அத்லாந்திக் கடலைக் குறுக்கே தாண்டத் திட்டமிட்டுள்ளார்.

கொலம்பஸ் என்பவர், புதிய கண்டத்தைக் கண்டறிவதற்கு 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பழமை வாய்ந்த கடல் பயணக் கருவிகளின் துணையுடன், மனிதர், அத்லாந்திக் கடலைக் கடந்து சென்றதை உறுதிப்படுத்த, கிறிட்ஸ் இப்பயணம் மேற்கொள்கிறார் என்று தெரிய வருகிறது.

கால்களால் ஓசையை வேறுபடுத்தி

உணரும் யானைகள்

ஆப்பிரிக்க யானைகள், அவற்றின் கால்களைக் கொண்டு இதர யானைக் கூட்டங்கள் எழுப்பும் ஓசைகளை வேறுபடுத்திஉணரும் ஆற்றல் உடையவை என்று அமெரிக்க அறிவியலாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகின்றது. இந்த ஓசைகள் ,அதிர்வு அலை வடிவில் தரை வாயிலாகப் பரவுகின்றன.

யானைக்கு நல்ல செவிப்புலன் உணடு. இருந்தும், யானையின் பெரிய காதுகள், உடல் குளிர்மையை நிலைநிறுத்த உதவும் உறுப்புகளாக மாறியுள்ளன. யானையின் குருதி, அதன் காதுகளிலுள்ள ரத்தக் குழாய்களில் ஓடும் போது வெப்பம் குறைகிறது என்றும் இப்புதிய ஆய்வு கூறுகிறது.

மிகத் தூய்மையான கடல் நீர்

பசிபிக் பெருங்கடலின் மத்திய பகுதியிலுள்ள கடல் பரப்பில், உலகில் மிகத் தூய்மையான கடல் நீர் உள்ளது. அதன் பரப்பளவு, மத்திய தரைக் கடலின் பரப்பளவுக்கு நிகரானது.

அங்குள்ள கடல் நீர், பூமியிலுள்ள மிகத் தூய்மையான ஏரி நீர் போலிவே, மிகத் தெளிந்து காணப்படுகின்றது. இக் கடல் பரப்பு, EASTER தீவுக்கு அருகில் அமைந்துள்ளது. புற ஊதா கதிர், கடல் நீருக்குள் 100 மீட்டர் ஆழத்தில் மட்டும் ஊடுருவ முடியும். அங்கிருக்கும் பாசிய அளவு, மிகப் பெரும்பாலான கடல் பரப்புகளில் இருப்பதை விட 10 மடங்கு குறைவாகும் என்று இது பொருட்படுகிறது.

எனவே, இக்கடல் பரப்பு, பூமியில் உயிரினங்கள் மிகக் குறைவாக வாழும் பகுதிகளில் ஒன்றாகும் எனக் கூறப்படுகின்றது.


1 2