• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-27 15:13:46    
கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனம்

cri

சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனமான சுவாங் இனத்தின் ஒரு கிளையான கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தைச் சேர்ந்த "Nei De Ya" குழு பாடுகின்ற இப்பாடல், மக்களுக்கு மனச்சுகம் தருகின்றது. கடந்த பல ஆண்டுகளில், இக்குழு, சீனாவின் பல்வேறு இடங்களில், இதை அரங்கேற்றியுள்ளது. தனது இனத்தின் நாட்டுப்புறப்பாடல்களை ஆசைத் தீரப்பாடிக் கொண்டே இருக்கின்றது. இக்குழு பெரிதும் வரவேற்கப்படுகிறது.

இக்குழுவின் தலைவர் Huang He Dong, கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தவர் அல்ல. இருப்பினும், இவ்வினத்தின் இசை மீதான தமது விருப்பத்தால், கடந்த ஐந்தாண்டுகளாக, இக்குழுவுக்குத் தலைமை தாங்கி, சீனாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பலவிதமான அரங்கேற்றங்களில் அவர் பங்கெடுத்தார். சுவாங் இன மொழியில் "Nei De Ya" என்றால், மிகவும் சிறந்தது எனப் பொருட்படுகின்றது. கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தின் நாட்டுப்புறப்பாடல் உண்மையிலேயே மிகவும் சிறந்தது, தனித்தன்மை வாய்ந்தது. இப்பாடல்களைக் கேட்ட பின், ஏதோ ஒரு அதிர்ச்சி உணர்வு ஏற்படுகின்றது. நாட்டுப்புறப்பாடல் பற்றி அவர் கூறியதாவது:

"நாட்டுப்புறப்பாடல்கள் 6 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அன்றாட வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அவை பாடப்படுகின்றன. விருந்தினர்களை வரவேற்கும் போது பாட வேண்டும். மதுபானம் வழங்கும் போது பாட வேண்டும். எனவே, இப்பாடல்கள் தலைமுறை தலைமுறையாக கையேற்றப்பட்டுள்ளன" என்றார், அவர்.
"Nei De Ya" குழு, கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தின் நாட்டுப்புறப்பாடல் பண்பாட்டினை, வெளியூர்களுக்கு கொண்டு சென்றது. 2001ம் ஆண்டில், குவாங் சி நங்னிங் நகரில் நடைபெற்ற சர்வதேச நாட்டுப்புறப்பாடல் விழாவில் இக்குழுவினர் முதன்முறையாக அரங்கேற்றினர். இதனால் அவர்கள் கவனிக்கப்படத் துவங்கினர். இதற்குப் பின், சீனத் தேசிய தொலைக்காட்சி நிலையத்தில் அவர்கள் அரங்கேற்றினர். நாடு முழுவதும் அவர்கள் வரவேற்கப்படுகின்றனர். எப்படிப்பட்ட நிலையில் இவ்வினம் வாழ்ந்துள்ளது? அவர்களின் பாட்டொலி ஏன் இவ்வளவு மர்மமானது? ஊடுருவல் ஆற்றலுடையது? இவற்றை அறிய, மென்மேலும் அதிகமான வெளியூர்களிலிருந்து பயணிகள் வருகை தருகின்றனர்.

குவாங் சி தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழும் கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தவர்கள், முக்கியமாக Na Po மாவட்டத்தில் வாழ்கின்றனர். 2 லட்சத்துக்குட்பட்ட மக்கள் தொகையுடைய இச்சிறிய மாவட்டத்தில் ஏறக்குறைய 60 ஆயிரம் சுவாங் இனத்தவர்கள் வசிக்கின்றனர். பண்டைக் காலம் தொட்டு, அவர்கள் கறுப்பு நிறத்துக்கு மதிப்பு அளித்து அதை அழகு என கருதுகின்றனர். கறுப்பு நிறம், அவர்களின் ஒரு வகை தேசிய இன அடையாளமாக மாறியுள்ளது. ஆயிரம் ஆண்டுகளாக மாறாமல் கையேற்றப்பட்டுள்ளது.
அண்மையில் எமது செய்தியாளர் Long Hua என்னும் கிராமத்தில், அவர்களின் நடையுடை பாவனைகளை நேரில் கண்டு உணர்ந்துள்ளார்.

கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தவர்கள் உற்சாகமிக்கவர்கள். விருந்தோம்பல் மிகுந்தவர்கள். கிராமத்தின் நுழைவாயிலை நெருங்க நெருங்க, விருந்தினரை வரவேற்பதற்காக மேளமடிக்கப்பட்டுக்கொண்டே, சில பத்து பேர் கிராமத்தின் நுழைவாயிலில் நின்று, கைகளில் மதுபானத்தை ஏந்திய வண்ணம் விருந்தினரை வரவேற்றனர். அவர்கள் தலை முதல் கால் வரை அணிந்திருந்த அனைத்துமே கறுப்பு நிறமே.
நாட்டுப்புறப்பால்களைப் பாடிக் கொண்டே அவர்கள் மதுபானத்தை விருந்தினர்களுக்கு வழங்குகின்றனர். அப்போது விருந்தினர்கள் ஒரே மூச்சில் மதுபானத்தை அருந்தி முடிக்க வேண்டும். இல்லாவிடில், தம்மை இழிவாகப் பார்ப்பதாக அவர்கள் கருதி விடுவார்கள்.

1 2