• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-27 15:13:46    
கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனம்

cri

கிராமத்தில் நுழைந்ததும், வரிசை வரிசையான மரத் துண்டு கட்டமைப்புடைய மாடி கட்டிடங்கள் செய்தியாளர்களின் கண்களில் தென்பட்டன.

இக்கட்டிடங்களுக்கு முன்னாலுள்ள வெற்றிடத்தில், சுவாங் இனத்தின் இளம் ஆண்களும் பெண்களும் விருந்தினர்களுக்கென, நாட்டுப்புறப்பாடலைப் பாடி நடனமாடுகின்றனர். மலைப்பிரதேசத்தில் வாழும் இந்த கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனத்தவர்கள், சிறு வயதிலிருந்தே நாட்டுப்புறப்பாடலை பாடத் துவங்குகின்றனர். காதல், உழைப்பு ஆகியவற்றை இப்பாடல்கள் வெளிப்படுத்தும். பாடல்களின் வரிகள், வளமான அம்சங்களுடையவை. இவ்வாண்டு 19 வயதான இளம் பெண் Li Hai Yan செய்தியாளருக்கென ஒரு நாட்டுப்புறப் பாடலை பாடினார். அவர் கூறியதாவது:

"சாதாரண நாட்களில் மலை ஏறி, உழைத்து உழைத்து களைப்படைந்த போது, நாங்கள் கற்களில் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றோம். பின்னர், பெரிய மலைகளை நோக்கி நாட்டுப்புறப்பாடல்களைப் பாடுகின்றோம். எங்களின் குரல் இனிமையாவதற்கு, இங்குள்ள பெரிய மலைகளே காரணம்" என்றார்.

பெரிய மலைகளில் வாழும் இவ்வினத்தவர்கள், வேளாண் உற்பத்தியில் முக்கியமாக ஈடுபடுகின்றனர். விவசாயம் மட்டுமே என்பதால், அவர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலை ஒப்பீட்டளவில் தாழ்ந்ததாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், தமது தனித்தன்மை வாய்ந்த நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் தேசிய இன நடையுடை பாவனைகள் மூலம், உள்ளூரில் சுற்றுலா துறை வளரத் துவங்கியது. பல குடும்பங்கள், உறைவிட வசதிகளை மேம்படுத்தியுள்ளன. குறைவற்ற குடும்பங்களில், தொலைபேசி, தொலைக்காட்சி பேட்டி முதலியவை இருக்கின்றன. வெளியூர்களுடன் அவர்கள் தகவல் தொடர்பை வலுப்படுத்தியுள்ளனர். சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, இவ்வினத்தவர்களின் வறிய வாழ்க்கை நிலையை மேம்படுத்தியுள்ளது. இவ்வாண்டு 45 வயதான சுவாங் இன மூதாட்டி Yang Gui Jin பெரிய மலையை விட்டு வெளியே போகவில்லை. அவர் கூறியதாவது:

"இப்போது சுற்றுலாத்துறை வளர்ச்சியினால், நாள்தோறும் பயணிகள் வருகின்றனர். வாழ்க்கை முன்பை விட பெரிதும் மேம்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் பிள்ளைகளும் பள்ளிகளுக்குப் போக முடியும். முன்பு இப்படி செய்ய முடியாது" என்றார்.

Na Po மாவட்டத்தின் அதிகாரி Li Yong Feng பேசுகையில், "தேசிய இனப் பண்பாட்டு மூலவளத்தை வகைப்படுத்தி, தேசிய இனச் சுற்றுலாத்துறையை வளர்ச்சியுறச்செய்து, இறுதியில், பொருளாதார வளர்ச்சியை தூண்டியுள்ளோம். இதனால் பொது மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு வளமடைந்துள்ளனர்" என்றார்.


1 2