• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-30 17:18:26    
அவர்களும் மனிதர்களே

cri
பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்திய வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா, எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற பைத்தியக்கார அவர்ஆஸ்பத்திரிக்கு போயி தன்னோட பைத்தியத்துக்கு வைத்தியம் பாப்பார்?

வணக்கம் நேயர்களே...

என்னடா இது நிகழ்ச்சியின் ஆரம்பமே சரியில்லையே என்று நினைக்கிறீர்களா.

பொதுவாக நமக்கு உடல் நலம் குன்றினால் உடனடியாக நமக்கு ராசியானவர் என்றும், நமது குடும்ப மருத்துவர் என்றும் நமது நம்பிக்கைக்கு பாத்திரமான மருத்துவரிடம் செல்வோம். மருத்துவர் என்பவர் கிட்டத்தட்ட ஒரு வல்லமை வாய்ந்த மனிதர், கிட்டத்தட்ட ஒரு தேவன் போல். அவர் நமது சிக்கலை நீக்கி விடுவார் என்பதில் நமக்கு அதீத நம்பிக்கை உண்டு. தங்களது குடும்ப மருத்துவரைத் தவிர மற்றவரை நாடாத, அவரைத் தவிர பிற மருத்துவரை தகுதியுள்ளவராக மதிக்காத பலர் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில மருத்துவர்களுக்கு அவர்கள் பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டத்தை விட சிறப்பான ஒரு பட்டமாக "கைராசிக்கார மருத்துவர்" என்றும் நம் மக்கள் கூடுதலாக ஒரு பட்டத்தைசூட்டுவதுண்டு. பகுதி நேரத்தில் அவர் அமரும் தனிப்பட்ட அவரது மருத்துவகத்தில் கூட்டம் அலைமோதும்.

உண்மையில் மருத்துவ சேவை என்பது மிக உன்னதமான சேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உயிர்களைக் காக்கும் சேவை என்பதால் தனிச்சிறப்பும், மதிப்பும் கொண்ட சேவையாக இது போற்றப்படுகிறது.

அதனால்தான் இந்த உன்னதச் சேவையில் சில வேளைகளில் நடைபெறும் முறைகேடுகளை மக்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை, சீறுகின்றனர் அல்லது புலம்பி தீர்க்கின்றனர்.

முறைகேடுகள் ஒருபுறமெனில், தற்செயலாக நிகழும் தவறுகள் மறுபுறம். தற்செயலாக நிகழ்ந்தாலும், திட்டமிட்டு நிகழ்ந்தாலும் இழப்பு நோயாளிகளாகிய நமக்குத்தானே என்று ஆதங்கத்தோடு ஒலிக்கும் குரல் எனக்கு கேட்கிறது.

ஆனால், இழப்பு நோயாளிகளுக்கு மட்டுமே அல்ல, மருத்துவர்களுக்கும்தான் என்று கூறுகிறது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

அதாவது, மருத்துவ ரீதியாக ஏற்படும் தவறுகளின் பின்னணியிலுள்ள மருத்துவர்கள், அல்லது தவற்றோடு எதோ ஒரு வகையில் தொடர்புடையவர்கள் மன அழுத்தம், தூக்கமின்மை, நம்பிக்கயிழப்பு ஆகிய சிக்கல்களுக்கு ஆளாகின்றனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது. பணியிட மருத்துவரீதியிலான தவற்றால் ஏற்படும் மன அழுத்தம், சில மருத்துவர்களை பதட்டநோய்க்கு ஆளாக்கும், பணியிலிருந்த்து விலக வைக்கும் அல்லது மேலும் கூடுதலான தவறுகள் நிகழ் வழிவகுக்கும் என்கிறார் இந்த ஆய்வின் மூத்த ஆய்வாளர் வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் ஏமி வாட்டர்மேன்.

1 2