• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-30 17:18:26    
அவர்களும் மனிதர்களே

cri

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ், சியாட்டில் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த 3171 மருத்துவர்கள் இந்தக் கள ஆய்வில் பங்கேற்றனர். கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் நடத்தப்பட்ட இந்த கள ஆய்வில் பங்கேற்ற மருத்துவர்களில், பெரும்பாலானர்வர்கள் அதாவது 2909 மருத்துவர்கள் பெரிய அல்லது சிறிய மருத்துவ தவற்றோடு தொடர்பு கொண்டவர்களாக அல்லது தவறு நிகழ்ந்திருக்கக்கூடிய சூழலிலிருந்து தப்பிய அனுபவம் கொண்டவர்களாக இருந்தனர். இந்தத் தவறுகளில் உயிராபத்து விளைவித்தவை முதல் நிரந்தரமாக பாதிப்பேற்படுத்தியவை வரை அடக்கம்.

மேலும் ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான மருத்துவர்கள், ஒருவேளை தவறு நிகழும்போது, உளநல ஆற்றுப்படுத்தல் அல்லது வேறு ஏதேனும் உதவியை பெற விரும்பினர் ஆனால், மருத்துவமனைகளிலும், சுகாதார நிறுவனங்களிலும் இத்தகைய உதவிகளேதும் பெரிதாக வழங்கப்படவில்லை.

மருத்துவ ரீதியிலான தவறுகளோடு தொடர்புடைய மருத்துவர்களில் 61 விழுக்காட்டினர் எதிர்காலத்தில் மீண்டும் நிகழக்கூடிய தவறு குறித்து பதட்டமடைந்தனர், 44 விழுக்காட்டினர் தங்களது மருத்துவத் திறமை மீதான தங்களின் நம்பிக்கை குறையத்தொடங்கியதாக கூறினர், 42 விழுக்காட்டினர் தூக்கமின்மை பிரச்சனையால் அவதியுற்றதாக கூறினர், 42 விழுக்காட்டினர் தங்கள் வேலையில் ஊக்கமிழந்து, மனநிறைவு இல்லாமல் போயினர்.

மருத்துவத் தவறுகள் நிகழ்ந்து அதற்கு காரணமாக இருந்த பலருக்குத்தான் இந்த பணி தொடர்பான மன அழுத்தங்கள் அதிகமாக காணப்பட்டது. அதேவேளை அத்தகைய தவறுகள் நிகழவேண்டியது ஆனால் நிகழவில்லை, தலை தப்பியது தம்பிரான் புன்னியம் என்பதாக தப்பில்லாமல் தப்பிய மருத்துவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மன அழுத்தம், பதட்டம் போன்ற சிக்கல்கள் காணப்பட்டதாக இந்தக் கள ஆய்வு கூறுகிறது.

நோய் என்ன என்பதை தவறாக கணித்துவிடுவது, தவறான மருந்து கொடுத்துவிடுவது, சில நேரங்களில் சற்றே கவனக்குறைவாய் அறுவை சிகிச்சை செய்யும்போது எதையாவது மறந்துவிடுவது, கத்தரிக்கோலை உள்ளேயே வைத்துத் தைத்துவிடுவது, ஊடுகதிர் அல்லது ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வுக்கூடச் சோதனைகளின் முடிவுகள் இடம் மாறுவது...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மருத்துவ ரீதியிலான தவறுகள் எந்த அளவிலும், எந்த நிலையிலும் நிகழ வாய்ப்புள்ளது. நம்மில் பலருக்கு இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும். அல்லது அனுபவம் கொண்டவரை நாம் அறிந்திருப்போம். எனவே இந்த சிக்கல் எவ்வளவு தீவிரமானாது என்பதை நீங்கள் உணரமுடியும்.

ஆகவே மருத்துவர்கள் நமக்கு நல்லதை செய்யத்தான் இருக்கிறார்கள் என்பது உண்மை, அதேவேளை நாமும் கொஞ்சம் அவதானமாக இருக்கத்தான் வேண்டும் என்பது நடைமுறை உணர்த்தும் பாடம். என்னதான் இருந்தாலும் மருத்துவரும் நம்மை போல மனிதர்தானே.


1 2