• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-02 11:52:40    
தமிழ் பிரிவின் தலைமையிலான பொது அறிவுப் போட்டி-தொகுதி 2

cri

கிளீ........கலை இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியின் இரண்டாவது விடயம் என்ன?

கலை.........கடந்த கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் நாம் இருவரும் நேயர்களுக்கு பொது அறிவு போட்டி பற்றிய தகவல்களை கூறினோம்.

செல்வம்..............எனக்கு தெரியும். இவ்வாண்டுக்கான தமிழ்ப் பிரிவின் தலைமையில் நடைபெறும் பொது அறிவு போட்டி உள்மங்கோலியாவில் வாழ் டாவோர் இன மக்களை பற்றியதாகும்.

கலை........ஆமாம்.

கிளீ........ எனக்கும் நினைவு வந்தது. கடந்த கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் தமிழ்ப் பிரிவின் தலைமையில் உள் மங்கோலியாவில் வாழ்கின்ற டாவோர் இன மக்கள் பற்றி பொது அறிவு போட்டி நடைபெறும் என்பதை அறிவித்தோம்.

கலை......ஆமாம். இதுவரை இது பற்றிய 4 கட்டுரைகள் தயாராக வுள்ளன.

செல்வம்........இந்த பொது அறிவு போட்டிக்கான வினாத்தாட்கள் நேயர்களுக்கு அனுப்பப்பட்டதா?

கலை.........இந்த வாரத்துக்குள் வினாத்தாட்கள் முழுவதும் அனுப்பப்படும்.

கிளீ.......இந்த முறை எத்தனை வினாதாட்கள் அனுப்பப்படும்?

கலை........மொத்தம் 60 ஆயிரம்.

செல்வம்.........இந்த முறை நேயர்கள் வினாத்தாட்களை அச்சடிக்க வேண்டுமா?

கலை...........தேவையில்லை. நாங்கள் அனுப்பும் 60 ஆயிரம் வினாத்தாட்கள் முழுவதையும் எங்களுக்குத் திரும்பி அனுப்பினால் மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் விடைதாட்கள் எங்களிடம் வந்து சேரும்.

கிளீ.......கலை. நீங்கள் இப்போதுதான் 60 ஆயிரம் வினாத்தாட்களை அனுப்புவது பற்றி சொன்னீர்கள். ஏன் திடீரென ஒரு லட்சத்து 80 ஆயிரம் விடைத்தாட்கள் என்று கூறுகிறீர்கள்?

கலை........ஓ அதுவா. இந்த முறை ஒரு தாளில் மூன்று வினாத் தொகுதிகள் உள்ளன. ஆகவே ஒரு வினாத்தாள் மூன்று விடைத்தாட்களாக விரிவாக்கப்படும்.

செல்வம்..........அப்படியிருந்தால் நேயர் மன்ற பொறுப்பாளர்கள் மன்ற உறுப்பினர்களை திரட்டி கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் வினாத்தாளை மூன்று விடைத்தாட்களாக கத்தரித்து இலவச கடித உறையில் போட வேண்டும்.

1 2