• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-02 11:52:40    
தமிழ் பிரிவின் தலைமையிலான பொது அறிவுப் போட்டி-தொகுதி 2

cri

கிளீ.........இது நல்ல முறை. எத்தனை வினாத்தாட்களை பெறுகிறார்களே அதை விட மூன்று மடங்கு விடைத்தாட்களைவ தமிழ்ப் பிரிவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

செல்வம்..........நான் மன்ற பொறுப்பாளர்களிடம் தெளிவுபடுத்துவேன். சரி, இந்த பொது அறிவு போட்டி எப்போது துவங்கும். அதை பற்றி சொல்லலாமே?

கலை.........ஆகஸ்ட் திங்கள் நடுப் பகுதியில் துவக்கலாம்.

கிளீ.........துவங்குவதற்கு முன் இது பற்றிய அறிவிப்பு ஒலிபரப்பப்படும்.

கலை.......ஆமாம். வழக்கம் போல நாங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவோம்.

செல்வம்........சரி, இங்கே ஒரு சிறிய யோசனை தெரிவிக்க விரும்புகிறேன்.

கலை.........சொல்லுங்கள்.

செல்வம்........பொது அறிவு போட்டி துவங்கும் அதேவேளையில் இது பற்றிய 4 கட்டுரைகள் தமிழ் இணைய தளத்தில் வெளியிட்டால் என்ன?

கிளீ........இது மட்டுமல்ல தமிழொலியில் இந்த கட்டுரைகள் முழுவதையும் வெளியிட்டால் மேலும் சிறப்பாகும்.

கலை.......நீங்கள் குறிப்பிட்டவை மிக சரியானவை. இதை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. முயற்சி செய்வோம்.

செல்வம்........அப்படியிருந்தால் இந்த போட்டி எப்போது நிறைவடையும்.

கலை........ஆகஸ்ட் திங்கள் நடுப்பகுதியில் துவங்கினால் வழக்கம் போல 2 திங்கள் நீடித்திருக்கும்.

கிளீ........ஆகவே அக்டோபர் திங்கள் நடுப் பகுதி வரை நீடிக்கும். அப்படிதானே.

கலை......ஆமாம். ஆகவே இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை கேட்ட பின் நேயர் மன்றத் தலைவர்கள் அதற்கான ஆயத்தம் செய்ய வேண்டும். இலவச கடித உறை தேவை என்றால் சீக்கிரமாக மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்கள். நாம் சீக்கிரமாக அனுப்புவோம்.

செல்வம்........ இன்றைய 'கேள்வியும் பதிலும்' நிகழ்ச்சியின் மூலம், நேயர்களுக்கு சில புதிய தகவல்களை வழங்கியதற்காக நிகழ்ச்சியின் முடிவில் நன்றி தெரிவிக்கின்றேன்.

கிளீ........சரி இன்றைய நிகழ்ச்சி நிறைவடையும் நேரம் ஆகிவிட்டது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போம்.


1 2