• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-13 09:07:50    
சிங்காய்-திபெத் இருப்புப்பாதையும் திபெத் பொருளாதார வளர்ச்சியும்-தொகுதி 2

cri
திபெத்தின் வடபகுதியில் அமைந்துள்ள NAQV பிரதேசத்தில் மக்கள் தொகை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இப்பிரதேசம், திபெத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் சங்கிலி ஆகும். சிங்காய்-திபெத் இருப்புப்பாதை வடக்கிலிருந்து தெற்கு வரை NAQV பிரதேசத்தின் ஊடாகச் செல்கின்றது. இப்பிரதேசத்தில் இருப்புப்பாதையின் நீளம் 500 கிலோமீட்டருக்கு அதிகம். இந்த இருப்புப்பாதையினால், NAQV பிரதேசம், திபெத்தில் மிகப் பெரிய பொருள் புழக்க மையமாக மாறும் என்று இப்பிரதேசத்தின் பொறுப்பாளர் தென்யுங்சௌ கூறினார்.

சிங்காய்-திபெத் இருப்புப்பாதையினால் திபெத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி குறிப்பிடும் போது, சுற்றுலாத் துறை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.

இவ்வாண்டின் முதல் 5 திங்களில், திபெத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கையும் சுற்றுலாத் துறை மூலம் கிடைத்த வருமானமும் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 30 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளன என்பதை திபெத் தன்னாட்சிப் பிரதேசச் சுற்றுலாப் பணியகம் வழங்கிய புள்ளிவிவரங்கள் காட்டியுள்ளன. வந்த வண்ணம் இருக்கும் பயணிகள் உறைபனிப் பீடபூமிக்குரிய தனிச்சிறப்பு வாய்ந்த எழில் மிக்க இயற்கைக் காட்சியைக் கண்டு களிக்கும் அதே வேளை, திபெத்தின் பாரம்பரிய பண்பாட்டையும் பரப்பியுள்ளனர்.

1 2