• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-13 09:07:50    
சிங்காய்-திபெத் இருப்புப்பாதையும் திபெத் பொருளாதார வளர்ச்சியும்-தொகுதி 2

cri

சிங்காய்-திபெத் இருப்புப்பாதையினால், திபெத் பொருளாதாரம் வளர்ச்சியுடையும் நிலைமையில், திபெத் பீடபூமியின் இயற்கைச் சூழல் பாதுகாப்பிலும் சீன அரசு மிகவும் கவனம் செலுத்துகின்றது. இது பற்றி இப்பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகத்தின் தலைவர் சாங்யுங்சே பேசுகையில், இந்த இருப்புப்பாதை போக்குவரத்துக்குத் திறந்துவிடுவதுடன் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் பிரச்சினை தொடர்பான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திபெத் அரசு மேற்கொண்டுள்ளது என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது, சிங்காய்-திபெத் இருப்புப் பாதை அதிகாரப்பூர்வமாக இயங்குவதற்கு முன்னரே, அது போக்குவரத்துக்குத் திறந்துவிட்ட பின்னர் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் பிரச்சினை பற்றியும் இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந்தோம். அதாவது, இப்பிரச்சினை ஏற்படுவதற்கு முன் நாங்கள் தடை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தவிர, சிங்காய்-திபெத் இருப்புப் பாதை இயங்கத் துவங்கிய பின்னர், தொழிற்துறையும் சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடையவும் ஆட்கள் நடமாட்டம் மற்றும் பொருட்களின் புழக்கம் அதிகரிக்கவும் கூடும். இவற்றைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகிறோம். இதனால் அனைத்து திட்டப்பணிகளும் திட்டமிடப்படும் போதே, இவற்றினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை மதிப்பீடு செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரச்சினை பற்றி மேலும் உயர்ந்த நிலையிலும் மிகவும் முன்னதாகவும் கருத்தில் கொண்டு கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் அவர்.

அறிவியல் தொழில் நுட்பம் கொண்ட, உயர் பயன் தர வல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய சிங்காய்-திபெத் இருப்புப்பாதை திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தைத், பொருளாதாரம் வேகமாக வளரும் பாதையை மேற்கொள்ளத் தூண்டியுள்ளது. 2010ஆம் ஆண்டிற்குள் நடுவண் அரசு மேலும் 7000 கோடி ரென்மின்பி யுவானை முதலீடு செய்யும். இவ்விருப்புப்பாதையின் லாசாவிலிருந்து RKEZEக்குச் செல்லும் பகுதி உள்ளிட்ட 180 முக்கிய திட்டப்பணிகளின் கட்டுமானத்துக்கும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் ஆயர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கும் இத்தொகை பயன்படுத்தப்படும். இதைக் கேட்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் எதிர்காலம் மேலும் ஒளிமயமாக இருக்கும் என்பது உறுதி என நம்புகின்றோம்.


1 2