• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-06 17:49:28    
சீனாவின் புதிய அறிவியல் தொழில் நுட்பத் திட்டம்-தொகுதி 1

cri

சீனாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், இவ்வாண்டு பிப்ரவரி திங்களில் ஒரு புதிய தேசிய நிலை அறிவியல் தொழில் நுட்பத் திட்டம் துவங்கபட்டுள்ளது.

தேசிய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு என்பது இதன் பெயராகும். சீன அரசு சுமார் 3000 கோடி யுவானை இதில் முதலீடு செய்யும். சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அடுத்த சில ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம், எரியாற்றல், மூலவளம், சுற்றுச்சூழல் முதலிய சிக்கலான பிரச்சினைகளைத் தணிவு செய்து, பொதுச் சேவை துறையிலான அறிவியல் தொழில் நுட்பத் தரத்தைப் பன்முகங்களிலும் உயர்த்த வேண்டும் என்று சீன அரசு விரும்புகின்றது. சீன அரசவை உறுப்பினர் சென் சி லீ அம்மையார் கூறியதாவது。

ஆதரவுத் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்துவது, பொருளாதாரக் கட்டுமானத்துக்கும் சமூக வளர்ச்சிக்கும் நேரடியாக சேவை புரியும். பொது நலத் தன்மை வாய்ந்த ஒரு தொகுதி தொழில் நுட்பங்களையும் இதர தீர்க்கமான தொழில் நுட்பங்களையும் திட்டத்தின் மூலம் கைபற்றி, சுய அறிவுசார் சொத்துரிமை வாய்ந்த ஒரு தொகுதி கனிகளைப் பெற வேண்டும். சர்வதேச சந்தையில் போட்டியாற்றல் மிக்க தொழில் நிறுவனங்களை வளர்த்து, சமூக மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குத் தடையாக நிற்கும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றார் அவர்.

தொழில் நுட்ப ஆராய்ச்சி திட்டம் என்பது தேசிய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு திட்டத்தின் பழைய பெயராகும். 1980ஆம் ஆண்டுகள் முதல், சீனா தொழில் நுட்ப ஆராய்ச்சி திட்டத்தை மேற்கொள்ளத் துவங்கியது. ஒரு தொகுதி தீர்க்கமான தொழில் நுட்பங்களையும் பொது நலத்தன்மை வாய்ந்த தொழில் நுட்பங்களையும் சீனா கைபற்றியது. எடுத்துக்காட்டாக, கலப்பு நெல், யாங்சி மூ மலை பள்ளத்தாக்குத் திட்டப்பணி, சின் சான் அணு மின் நிலைய கட்டுமான திட்டப்பணி முதலியவை, மாபெரும் சமூக மற்றும் பொருளாதார பயன்களைத் தந்துள்ளன.

1 2