தற்போது, ஒரு புதிய வளர்ச்சிக் கட்டத்தில் சீனா நுழைந்துள்ளது. எரியாற்றல், மூலவளம், சுற்றுச்சூழல், கடும் நோய் சிகிச்சை மற்றும் தடுப்பு, தொழிலின் போட்டியாற்றல், பொது பாதுகாப்பு முதலிய துறைகள் கடுமையான அறைகூவல்களை எதிர்நோக்குகின்றன. முன்பு இருந்த தொழில் நுட்ப ஆராய்ச்சி திட்டத்தால் இந்த தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை.
ஆகையால், பழையத் திட்டத்தின் அடிப்படையில், சீனா தேசிய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு திட்டத்தை நிறுவியது. வேளாண்மை, அரை உற்பத்தி பொருள், தயாரிப்புத் தொழில் உள்ளிட்ட 11 துறைகளுடன் தொடர்புடையது இத்திட்டம். சுமார் 350 திட்டப்பணிகளுக்கு இது ஆதரவு வழங்கும் என்று சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சின் வளர்ச்சி திட்டப் பிரிவின் தலைவர் வான் சியௌ பாங் கூறினார். இதுவரை, முதல் தொகுதி திட்டப்பணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர் கூறியதாவது, முதல் தொகுதியில் 147 திட்டப்பணிகள் இடம்பெறுகின்றன. மத்திய நிதியம் சுமார் 735 கோடி யுவான் முதலீடு செய்துள்ளது என்றார் அவர்.
பெய்ஜிங் tian hui hua டிஜிட்டல் தொழில் நுட்ப நிறுவனம் ஆராயும் பி ரக வண்ண டிஜிட்டல் மிகை ஒலி அலை சோதனை சாதனம் முதல் தொகுதித் திட்டப்பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இத்தகைய சாதனத்தை ஆராயந்ந்து தயாரிப்பதற்கு, குறைந்தது ஒரு கோடி யுவான் தேவைப்படுகின்றது. இந்த பெரும் தொகையான முதலீடு, tian hui hua டிஜிட்டல் தொழில் நுட்ப நிறுவனம் போன்ற சிறிய ரக நிறுவனத்துக்கு பொருளாதார ரீதியில் மாபெரும் இடப்ப்பாட்டை ஏற்படுத்தக் கூடும் என்பதில் ஐயமில்லை என்று இந்நிறுவனத்தின் பொறுப்பாளர் SHEN JIAN LEI கூறினார். ஆனால், இத்திட்டப்பணி தேசிய நிலை ஆதரவு திட்டத்தில் சேர்க்கப்பட்டப் பிறகு, இந்த ஆய்வு தமது நிறுவனத்தின் சொந்த கடமை அல்ல. அவர் கூறியதாவது 1 2
|