• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-13 09:10:33    
சீனாவின் புதிய அறிவியல் தொழில் நுட்பத் திட்டம்-தொகுதி 2

cri

தேசிய ஆதரவு திட்டம் 30 இலட்சம் யுவான் நிதியுதவி வழங்குகின்றது. இதர தொழில் நிறுவனங்களிலிருந்து மேலும் 30 இலட்சம் யுவான் கிடைக்கலாம். இவ்வாறு அறிவியல் தொழில் நுட்பத் திட்டப்பணிக்குப் பொறுப்பு ஏற்ற பின், எமது நிறுவனம் சமூகத்திலிருந்து முன்பை விட சுமார் 10 மடங்கு முதலீட்டை உட்புகுத்தலாம். தேசிய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு திட்டம் எங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்துள்ளது என்றார் அவர்.

மூலவளமும் இத்திட்டம் முக்கியமாக ஆதரவு வழங்கும் அம்சமாகும். திட்டத்தின் படி, 2010ம் ஆண்டுக்குள், திட்டத்தின் மூலம், சிற்பபுத் தேவைக்கென சீனா 3 அல்லது 4 பெரிய சுரங்கங்களைக் கண்டுபிடிக்கும். தொழில் துறையில் நீர் மறு பயன்பாட்டு விகிதம் 80 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, கடல் நீர் பயன்பாடு உள்ளிட்ட முக்கிய தொழில் நுட்பங்களைக் கைபற்ற வேண்டும்.

அதேவேளையில், இந்த ஆதரவு திட்டம், மக்களின் உடல் நலம், போக்குவரத்து முதலிய மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடைய அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி திட்டப்பணிகளுக்கு முக்கியமாக உதவி வழங்கும். பெய்ஜிங் மாநகர் காவல் துறை அலுவலகத்தின் பொது பாதுகாப்பு போக்குவரத்து நிர்வாக துறையைச் சேர்ந்த போக்குவரத்து வழிகாட்டு மையத்தில், அறிவார்ந்த போக்குவரத்து நிர்வாகத் தொகுதி பயன்படுத்தப்படுகின்றது. ஆதரவு திட்டத்தின் உதவியுடன் கட்டியமைக்கப்பட்ட இத்தொகுதி மூலம், பெய்ஜிங் மாநகரின் போக்குவரத்து நிலைமையை முற்றிலும் கையாண்டு, நவீன நிர்வாகம் செய்யலாம். புள்ளிவிவரங்களின் படி, இந்தத் தொகுதி இயங்கிய பின், பெய்ஜிங் சாலை சந்திப்புகளின் போக்குவரத்து திறன் சராசரியாக 12 விழுக்காடு அதிகரித்துள்ளது.

1 2