• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-09 14:58:52    
சீனாவில் இணையப் பயனாளர்கள்

cri

இவ்வாண்டின் ஜூன் திங்கள் இறுதிவரை, சீனாவி்ல் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 16 கோடியே 20 லட்சத்தை எட்டியுள்ளது.

செல்லிடப் பேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 4 கோடியே 43 லட்சமாகும். அதாவது இணையத்தைப் பயன்படுத்துவோரில் சராசரியாக 4 பேரில் ஒருவர், செல்லிடப் பேசி மூலம் இணையத்தைப் பார்க்கிறார். மேலும், சுமார் 20 விழுக்காட்டினர், இணைய தளங்கள் மூலம் பங்குப் பேரத்தில் ஈடுபடத் துவங்கினர்.

சீன இணையதள தகவல் மையம், சூலை 18ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை, இத்தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 6 திங்கள் காலத்தில், சராசரியாக நிமிடத்துக்கு 100 இணையப் பயனாளார்கள் அதிகரிக்கும் நிலை, சீனாவில் உருவாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

சீனாவில் தற்போது 13 லட்சத்து 10 ஆயிரம் இணையதளங்கள் உள்ளன. CN இணைய தளங்களின் எண்ணிக்கை, 8 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதன் ஆண்டு அதிகரிப்பு விகிதம் 137.5 விழுக்காடாகும். CN இணைய தளங்களின் எண்ணிக்கை, COM இணைய தளங்களின் எண்ணிக்கையை முதன் முறையாகப் பெரிதும் தாண்டியுள்ளது என்று இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

ஆண்மையை அதிகரிக்கும் தக்காளி சூப்

நாள்தோறும் தக்காளி சூப்பைச் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று பிரிட்டனைச் சேர்ந்த போர்ட்ஸ்முத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பல்கலைக்கழக ஆய்வாளர்கள், 42 வயதுடைய 6 ஆண்களைத் தேர்ந்தெடுத்து, நாள்தோறும் இவர்களுக்குத் தக்காளி சூப் அளித்து வந்தனர். இரண்டு வாரங்களுக்குப்பின் அந்த 6 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட போது இவர்களின் விந்தணு திரவத்தில் லைகோபின்னின் (lycopene) அளவு, 7 முதல் 12 விழுக்காடு வரை அதிகரித்தமை தெரிய வந்துள்ளது.

1 2