• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-09 14:58:52    
சீனாவில் இணையப் பயனாளர்கள்

cri

மலடர்களின் விந்தணு திரவத்தில் லைகோபின்னின் அளவு, குறைவானது. எனவே, ஆண்மையின் அதிகரிப்பு, லைகோபின்னின் அளவு கூடியிருப்பதுடன் தொடர்பு உடையது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தக்காளிக்குச் சிவப்பு நிறத்தை அளிக்கும் லைகோபின் என்ற பொருள், ஆண்மையை அதிகரிப்பதற்குத் துணைபுரியும் என்பதைக் கண்டுபிடிபபது இதுவே முதன் முறையாகும்.

டெய்லி டெலிகிராப் என்ற நாளேடு, போர்ட்ஸ்முத் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்களை மேற்கோள் காட்டி, சூலை 29 ஆம் நாள் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

நண்பகல் தூக்கம் தேவையா?

நண்பகல் தூக்கத்தைக் கோரும் சட்டத்தை நாடாளுமன்றம் கொண்டுவர வேண்டுமா இல்லையா என்பது குறித்துப் பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்த, ஹங்கேரிய தேசிய தேர்தல் ஆணையம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாண்டு கோடைக்காலத்தில், வரலாற்றில் முன்னென்றும் கண்டிராத அளவில் வெப்ப அலை, அந்நாட்டைத் தாக்கியிருப்பதால் மக்கள் தாங்க முடியாதவாறு அல்லல்பட்டுள்ளனர். இதுவரை 500 பேர் கடும் வெப்பத்தினால் தாக்குண்டு நோய்வாய்ப் பட்டுள்ளனர். இந்நிலையில், உணவகங்களில் பீர் மதுவின் இலவச வினியோகம் குறித்துப் பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பலர் முன்மொழிந்தனர். ஆனால், இந்நடவடிக்கை, சந்தைக்குழப்பத்திற்கு வழிகோலும் என்று கருதி, ஹங்கேரிய அரசு இதை மறுத்துள்ளது.

நண்பகல் தூக்கம் தொடர்பான கருத்துருவை ஆதரிக்கும் 2 லட்சம் கையொப்பங்கள் அரசு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் ஹங்கேரிய தேர்தல் ஆணையம், பொது மக்கள் வாக்கெடுபபுக்கு ஒப்புதல் வழங்க வேண்டியிருக்கிறது.

1989 ஆம் ஆண்டு முதல், ஹங்கேரியில் பல முறை பொது மக்கள் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன். எனினும், இதுவரை, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது பற்றிய 2 கருத்துருக்கள் மட்டும் பொது மக்கள் வாக்கெடுப்பில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பது அறியத் தக்கது.

மக்கள் தொகை குறைந்து வரும் ரஷியா

இவ்வாண்டு ஜூன் முதல் நாள் வரை, ரஷியாவின் மொத்த மக்கள் தொகை, 14 கோடியே 20 ஆயிரமாகும். முதல் 5 திங்கள் காலத்தில், மக்கள் தொகையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் குறைந்துள்ளது.

ரஷிய கூட்டாட்சிப் புள்ளிவிபர வாரியம் சூலை 20 ஆம் நாள் இத்தகவலைத் தந்துள்ளது.

குறைந்த பிறப்பு விகிதமும் உயர்ந்த மரண விகிதமும் ரஷியாவில் மக்கள் தொகை குறைந்து வருவதற்கு முக்கிய காரணங்களாகும். இவ்வாண்டின் முதல் 5 திங்கள் காலத்தில், ரஷியாவில் சுமார் 6லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் பிறந்தன. இறந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 90 ஆயிரமாகும்.2016ஆம் ஆண்டுக்குள், ரஷியாவின் மக்கள் தொகை 13 கோடியே 50 லட்சமாகக் குறைக்கப்படக் கூடும் என்றும் ரஷிய புள்ளிவிபர வாரியம் தெரிவித்துள்ளது.


1 2