• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-15 12:55:56    
Chong qing மாநகரத்தின் அக்கப்பணி

cri

விடுதலைச் சின்ன பிரதேசம், chong qingஇன் மத்திய பகுதியிலான ஒரு கிடைத்ததற்கரிய சமவெளி ஆகும். கடந்த நூற்றாண்டில், chong qing யின் கடைகள் படிப்படியாக இங்கு கூடி வந்துள்ளன. 1950ம் ஆண்டுகளில், chong qing பல சரக்கு மாளிகை உட்பட, பெரிய வணிக நிறுவனங்களில் 70 விழுக்காடு இங்கு செறிந்து கிடந்தன. 1997ம் ஆண்டில், விடுதலைச் சின்ன பிரதேசம், வாகனப் போக்குவரத்து இல்லாத நடை பாதையாக மாற்றியமைக்கப்பட்டது. இது chong qing நகரத்தின் ஒரு முக்கிய திட்டப்பணியாகும். இந்த நடை பாதை, இதன் பரபரப்புக்குப் புகழ் பெற்றது. மக்கள் விடுதலைச் சின்ன சதுக்கத்தில் உலாவுவது, ஹங்காங்ஙின் zhong huanவீதியில் அல்லது நியூயோக்கின் Manhattanவீதியில் இருப்பதைப் போலவே உள்ளது.

விடுதலைச் சின்ன சின்னம், chong qing நகரத்தின் வளர்ச்சிக்குச் சான்றாக விளங்குகிறது. 1997ம் ஆண்டில் chong qing, மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீவுள்ள மாநகரமாக மாறியுள்ளது. அப்போது முதல், சீன அரசு இம்மாநகருக்கு மேலும் பெரிய நிர்வாக அதிகாரத்தையும் மேலும் அதிகமான கொள்கை மற்றும் நிதி உதவியையும் அளித்து வருகிறது. chong qin மாநகரத்தின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது. இந்நகரம் முன்கண்டிராத வேகத்தில் உயரமாகவும் பெரிதாகவும் வளர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் பல பத்து கிலோமீட்டர் நிலம் நகரமயமாக்கப்பட்டு புதிய நகரப் பிரதேசமாக மாறி வருகின்றது. chong qin யின் முக்கிய நகரப் பிரதேசம், பழைய நகரப் பிரதேசத்தின் அடிப்படையில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

பூசுதல் கலை

chong qinயில் நகரமயமாக்கத்தின் முன்னேற்றப் போக்கு விரைவுபடுத்தப்படும் அதே வேளையில், ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் மக்கள், இதன் நகரப்புறத்தில் குடியேறி வருகிறார்கள். இதன் விளைவாக, வீடுகள் மீதான மக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, chong qin யின் வீடு மற்றும் நிலச் சொத்துப் பேரம் முன் கண்டிராத அளவில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நகரின் தென்மேற்கு பகுதியின் da du kou பிரதேசம், வீடு மற்றும் நிலச் சொத்து முதலீடு, அதிக அளவில் நடைபெறும் ஒரு புதிய பிரதேசமாகும். முன்பு da du kou பிரதேசம், ஒரு பெரிய அரசு தொழில் நிறுவனமான chong qing இரும்பு உருக்குக் குழுமத்தைச் சேர்ந்த சமூகப் பிரதேசமாக மட்டும் இருந்தது. சில ஆண்டுகளின் வளர்ச்சிக்குப் பிறகு இது, chong qing யில் சிற்றாறும் தோட்டமும் வாய்ந்த ஒருசில புதிய நகரப் பிரதேசங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இரும்பு உருக்குக் குழுமமும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகக் குடிபெயரத் தொடங்கியுள்ளது.

பூசுதல் கலை

என்னினும், chong qingஇல் இன்னும் சில பழைய வீதிகளையும் குடியிருப்புப் பிரதேசங்களையும் மறுசீரமைப்பது கடினமானது. Jiu long po பிரதேசத்தைச் சேர்ந்த huang jue ping வீதிச்சுவர்களில் காணப்பட்ட பூசுதல் கலை, இந்நகர மக்களின் விவேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

நகரவாசிகள் சிலர் இச் செயலை ஆதரிக்காத போதிலும், HUANGJUEPINGஇன் வீதிச்சுவர் பூசுதல், கலை என்ற வடிவில் விலங்குகள்,புல் பூண்டுகள் , வண்ணவண்ண நிறங்கள் முதலிய இயற்கை மணம் கமழும் காட்சிகளைப் பழைய ,விறுவிறுப்பற்ற வீதிகளுக்குக் கொண்டுவந்துள்ளமை, அனைவருக்கும் புதுமையானது என்று வேறு சிலர் கருதுகின்றார்கள். இந்த வீதியிலமைந்துள்ள SICHUAN நூண்கலைக் கல்லூரி, புத்தாக்கப் பணியிலான தனது மேம்பாட்டை வெளிக்கொணர்ந்ததோடு., புத்தாக்கத் தொழிற்துறைகள் பலவற்றையும் இவ்வீதிக்கு ஈர்த்துள்ளது. இதனால்,இவ்வீதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. வியாபாரம் கூட நன்றாக நடைபெற்று வருகிறது.


1 2