
செயற்கை முறையில் மழையை நீக்குவது
பெய்ஜிங்கில் மழை நீக்கல் திட்டம்
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் காலத்தில், மேகத்தைக் கலைத்து மழையை நீக்கும் திட்டத்தைப் பெய்ஜிங் மாநகர வானிலைப் பணியகம் சூலை 19ஆம் நாள் வெளியிட்டுள்ளது. அப்போதைய மழை அளவுக்கு ஏற்ற படி, முறையே ஏவு கலம் (ராகெட்டு), பீரங்கி, விமானம் உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்த இப்பணியயகம் முடிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் திங்கள், பெய்ஜிங்கின் மழைக்காலமாகும். பல ஆண்டுகாலப் புள்ளிவிபரங்களின் படி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டித் துவக்க விழா நடைபெறும் ஆகஸ்ட் 8ஆம் நாளன்று, மழை பெய்யும் விகிதம் 50 விழுக்காடாகும். இதில் சிறு மழையும் நடுத்தர மழையும் தலா 50 விழுக்காட்டை வகிக்கின்றன.
செயற்கை முறையில் மழையை நீக்குவது என்பது, உலகளவில் அறிவியல் சோதனைக் கட்டத்தில் உள்ளது. பெய்ஜிங் மாநகர வானிலைப் பணியகத்தின் ஆற்றலுக்கு இணங்க, சிறு மழை மற்றும் நடுத்தர மழையைச் செயற்கை முறையில் நீக்குவதில் குறிப்பிடத் தக்க பயன் பெற முடியும் என்று இப்பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆர்திக் கடலடியில் ரஷிய நாட்டுக்கொடி
ரஷியாவைச் சேர்ந்த அறிவியல் ஆய்வுக் குழு ஒன்று, ஆகஸ்ட் 2ஆம் நாள், ஆழ்க்கடல் நீர்மூழ்கி மூலம் வட துருவத்தில் 4000 மீட்டர் ஆழத்திலுள்ள ஆர்திக் (ARTIC) கடலடியில் ரஷிய நாட்டுக் கொடி ஒன்றை நாட்டியுள்ளது. இந்நாட்டுக்கொடி டைடேனிய (titanium) கலப்புலோகத்தாலானது என்பது குறிப்பிடத் தக்கது. புகழ்பெற்ற வட துருவ இயலாளரும் ரஷிய நாடாளுமன்றக் கீழ் அவையின் துணைத் தலைவருமான சிளிம்காரோப் தலைமையிலான இக்குழுவின் ஆய்வு நடவடிக்கைகள், 90 நாட்கள் நீடிக்கும். இதற்கு 10 கோடி ரூபிள் தொகை செலவிடப் படும் என்று தெரிய வருகிறது.
ரஷியாவின் இச்செயல்பாடு, உலகில் ஒரே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்திக் கடலடியில் நாட்டுக் கொடியை நாட்டியுள்ள ரஷியாவின் செயல்பாடு, சட்ட ரீதியில் செல்லுபடியாகாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
வட துருவத்திலான ரஷியாவின் இச்செயல்பாடு, துருவ ஆய்வில் ரஷியா காட்டிய கைவரிசையே அன்றி வேறல்ல என்று கனேடிய வெளியுறவு அமைச்சர் பீட்டர் மெகாய் கூறினார்.
1 2
|