• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-16 12:51:04    
பெய்ஜிங்கில் மழை நீக்கல் திட்டம்

cri

கரியமிலவாயு வெளியேற்றம்
இல்லாத முதல் நாடு

வத்திகான் நகரில் மரம் நடுவதன் மூலம், அங்குள்ள மக்களின் கரியமிலவாயு வெளியேற்ற அளவை ஈடுகட்ட, அமெரிக்கா மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் முயற்சி மேற்கொள்ளும். இம்முயற்சியினால் கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாத முதல் நாடாக வத்திகான் விளங்கும்.

வத்திகான்

மரங்கள், கரியமிலவாயுவை உறிஞ்சுகின்றன. ஒவ்வொரு ஹெக்டர் காடும் நாள்தோறும் ஒரு டன் கரியமிலவாயுவை உறிஞ்சுகின்றது. இவ்விரு நிறுவனங்களும் இத்தனிச் சிறப்பைப் பயன்படுத்தி, வத்திகானை, கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாத நாடாக மாற்றத் திட்டமிட்டுள்ளன. இத்திட்டத்திற்கிணங்க, வத்திகான் நகரில் 100 மரங்கள் நடப்பட்டு வளர்க்கப் படுமாம். எனினும், இந்நகரில் தற்போதுள்ள பசுந் தரைகள் மற்றும் மரங்களின் பரப்பளவு, மக்கள் வெளிவிடும் கரியமிலவாயு அளவு ஆகியவற்றுக்கு ஏற்ற படி, நட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் இவ்விரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

மிக அதிகமான வெளிநாட்டுப் பயணிகளுக்குச்
சிகிச்சை அளிக்கும் நாடு

 தாய்லாந்து பற்றிப் பேசியதும், அதைச் சிறந்த சுற்றுலா நாடு என்பார்கள். உண்மையில், அதன் தரமான மருத்துவச் சிகிச்சைச் சேவைக்கும், உலகில் அது புகழ் பெற்று விளங்குகிறது.

தாய்லாந்து

புள்ளிவிபரங்களின் படி, கடந்த ஆண்டு 14 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் தாய்லாந்தில் மருத்துவச் சிகிச்சை பெற்றுள்ளனர். இது, தாய்லாந்துக்கு 72 கோடியே 70 லட்சம் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டித் தந்துள்ளது. இதனால் மிக அதிகமான வெளிநாட்டுப் பயணிகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கும் நாடு என்ற பெருமையைத் தாய்லாந்து பெற்றுள்ளது.

அரசியல் நிலைமையில் நிதானமின்மை என்ற காரணி இல்லை என்றால், இவ்வாண்டு, வெளிநாட்டுப் பயணிகளுக்கான தாய்லாந்தின் மருத்துவச் சிகிச்சைச் சேவைச்துறை, சுமார் 10 விழுக்காடு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


1 2