• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-21 11:22:58    
சீனக் காற்ராடிகள்

cri

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்று ஒரு திரைப்பாடல் உண்டு. பறவை எப்படி பறக்கிறது அதன் இறக்கைகள் எத்தகைய பயனளிக்கின்றன என்பதையெல்லாம் ஆராய்ந்த மனிதகுலம் இன்றைக்கு வானத்தை மட்டுமல்ல, வளிமண்டலத்தைத் தாண்டி சந்திரனுக்கும், செவ்வாய்க்குமாய் பறக்கும் கலங்களை கண்டறிந்துள்ளது. இன்றைக்கு இவ்வளவு முன்னேறிய வளர்ச்சியில் நிற்கும் விமானம் மற்றும் வான் போக்குவரத்து சாதனங்கள், விண்வெளி ஆய்வுக்க்கலங்கள் இவற்றுக்கெல்லாம் ஒரு மூதாதையராக நாம் காற்றாடியையே சொல்லவேண்டும்.

நீதம் என்ற பிரித்தானிய அறிவியலார. காற்றாடி ஒரு முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பு என்று தனது "சீன அறிவியல் தொழில்நுட்ப வரலாறு" என்ற புத்தககத்தில் குறிப்பிடுகிறார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்கள் காற்றாடியை கண்டுபிடித்தனர்.

மு யுவான் எனும் மரத்தாலான காற்றாடி, ஷு யுவான் எனும் காகிதத்தால் ஆன காற்றாடி தவிர பட்டாலான காற்றாடியும் சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு சான்றுகள் உள்ளன. முந்தைய நம் நிகழ்ச்சிகளில் இது தொடர்பாக பல தகவல்களை குறிப்பிட்டிருந்தோம். இன்றைய நிகழ்ச்சியில் முக்கியமாக சீனாவில் புகழ்பெற்ற சில வகை காற்றாடிகளை பற்றியும் அவற்றின் சிறப்பம்சங்கள் பற்றியும் சில தகவல்கள் உங்களுக்காக.

நமக்கெல்லாம் தெரிந்தது மூங்கில் அல்லது தென்னங்குச்சியை நேராக ஒன்றும், குறுக்கே வளைத்து ஒன்றுமாக ஒரு சதுர காகிதத்தில் இணைத்து, இரு குச்சிகளும் சந்திக்கும் இடத்திலும், நேராக உள்ள குச்சியில் மற்றொரு இடத்திலுமாக நூலை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பொருந்த கட்டி, காற்றாடியை தயாரிப்பது. இந்த நூலை இணைக்கும் வித்தையை சூத்திரம் என்று குறிப்பிட்டு பெயர் சொல்லி, நம்மை விட மூத்த, அனுபவம் கொண்ட அண்ணனிடம் சென்று போடச்சொல்லி வாங்கிவந்து பறக்கவிட்ட அனுபவங்கள் நமக்கு இருக்கும்.

ஏறக்குறைய அதே முறையில்தான் சீனக் காற்றாடிகலும் தயாரிக்கப்படுகின்றன, தயாரிக்கப்பட்டன. ஆனால், அவர்கள் இதை மிகச்சிரத்தையோடு மேற்கொண்டனர். மூங்கிலை தேர்வு செய்து, அதை மிக நேர்த்தியாக வெட்டி, பொருத்தி, காகிதத்தை வெட்டி ஒட்டி, வண்ணங்களை குழைத்து அதில் பூசி, அல்லது பட்டுத்துணியை கொண்டு காற்றாடியை தயாரிக்கின்றனர்.

ஆனால் சீன காற்றாடிகளுக்கு நான்கு பக்கமும் மூங்கில் குச்சிகளால் கொண்டு அமைக்கப்படும் சட்டம், இச்சட்டத்தை நடுவில் இணைக்கும் இரு குச்சிகள், கட்டம் கட்டமாக சட்டங்கள் கொண்டு உருவாக்கப்படும் கம்பளிப்பூச்சி அல்லது டிராகன் வடிவ காற்றாடிகள் என வகைகள் பலப்பல. மேலும் சீன பாரம்பரியத்திலும், நாட்டுப்புறக்கலையிலும் ஒரு அங்கமாக மாறிய காற்றாடிகள், இடத்திற்கு ஏற்றபடி பல வகைகளில் வடிவங்களிலும் தயாரிக்கப்படுவதை நாம் சுட்டிக்காட்டவேண்டும்.

1 2