• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-21 11:22:58    
சீனக் காற்ராடிகள்

cri

பெய்சிங், தியன்சின், ஷாந்துஙைச் சேர்ந்த வெய்ஃபாங்,, சிச்சுவான், குவாங்துங் ஆகிய மாநிலங்களின் காற்றாடிகள் இவற்றில் முக்கியமானவை. வரலாற்று வளர்ச்சியுடன் காற்றாடிகளின் வடிவங்களும் வளர்ச்சியும் தொடர்ந்தன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இசை, நடனம், நாட்டுப்புற வழமை, நாடகம் இவற்றோடு அப்பகுதியின் காற்றாடிகளுக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. காற்றாடிகள் இந்த கலைவடிவங்களை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டன.

தயாரிப்பு

பெய்சிங்க் காற்றாடிகளில் முக்கியமாக ஏழு வகைகள் புகழ்பெற்றவை. ஒவ்வொன்றும் ஒரு வகை. மெல்லிய காகிதம் அல்லது பட்டு, மிக நேர்த்தியான ஓவியங்கள், இயற்கையை அதிகம் பிரதிபலிக்கும் வண்ணங்கள் ஆகியவை பெய்சிங் காற்றாடிகளின் சிறப்பியல்வுகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புதிய புதிய காற்றாடிகள் பெய்சிங் வானில் பறக்கத்தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மறுபுறத்தில் ஷாந்துங்கைச் சேர்ந்த வெய்ஃபாங் காற்றாடிகள் அவற்றின் நாட்டுப்புறக்கலைகளை நாட்டுப்புற பழக்கவழக்கங்களை பிரதிபலித்தன. அதிலும் மற்ற சீனக்காற்றாடிகளை விட பொருள் பொதிந்த தன்மையுடன்கூடிய காற்றாடிகள் வெய்ஃபாங்க் காற்றாடிகள்.

தியன்சின் காற்றாடிகளை பொருத்தவரை அதன் வண்ணங்கள், புதிய, நவீன வடிவங்கள், ஓவியங்கள் இவற்றுக்கென புகழ்பெற்றவை.

நாந்துங்கைச் சேர்ந்த காற்றாடிகளின் சிறப்பம்சம், அவற்றில் பொருத்தப்படும் ஒலியெழுப்பும் கருவிகள். பேருந்தில் நடத்துனர் வைத்திருக்கும் ஊதலைப் போன்ற சிறிதும் பெரிதுமாக பல ஊதல் அல்லது வீழைகளை பயன்படுத்துகின்றனர். இது காற்றில் பறக்கையில் ஒலியெழுப்பும். அதனால்தான் நாந்துங் காற்றாடிகளுக்கு "காற்றில் இசைக்கோர்வை" என்று பெயர் உண்டு.

இப்போது குறிப்பிட்ட அனைத்து காற்றாடிகளும் அந்தந்த மாநிலங்களில், இடங்களில் இன்றளவும் தயாரிக்கப்படுகின்றன, பறக்கவிடப்படுகின்றன.
சீனாவில் டிராகன் காற்றாடிகளும் புகழ்பெற்றவை. இந்தக்காற்றாடிகள்,
டிராகனின் உடல் போல போலவே தலை, வால் மற்றும் உடல் என்று பகுதிப்பகுதியாக இணைத்து உருவாக்கப்படுகின்றன

காற்றாடிகளின் வரலாறு, பண்பாட்டு அம்சங்கள், வகைகள் என சீனக்காற்றாடிகளை பற்றி கொஞ்சம் விபரமாகவே நாம் தகவல்களை வழங்கியுள்ளோம்.

பொதுவாகவே நாம் விருந்து பரிமாறும் போது தலைவாழை இலைபோட்டு உபசரிக்கிறோம். விருந்துண்டு முடித்ததும் இலையை நம் பக்கமாக மூடுவதற்கும், எதிர்பக்கமாக மூடுவதற்கும் தனி அர்த்தங்கள் உண்டு. இது போல பல நுணுக்கமான விடயங்கள் எல்லா கலாச்சாரங்களிலும் உண்டு. இவற்றை அறிந்து நடந்தால் நம்மை பண்பட்டவர்களாக, மரியாதை அறிந்தவர்களாக மக்கள் கருதுகின்றனர். சீனாவிலும், சாப்பிடும்போது எங்கே எப்படி அமரவேண்டும், பரிமாறும்போது கவனிக்கவேண்டியவை இது தவிர சாப்பிடும் பொருட்களின் பின்னணியில் ஒளிந்திருக்கும் உள்ளார்ந்த அர்த்தங்கள் என பல நுணுக்கமான விடயங்கள் உள்ளன.
இனி அடுத்த வாரம் சீனர்களின் உணவு தொடர்பான இங்கிதங்கள், பண்பான நடத்தை பற்றி சுவையான தகவல்களோடு உங்களை சந்திப்போம்.


1 2